லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்
Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
Lok Sabha Elections 2024: 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய மக்களவை தேர்தல் 2024 மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்கிழமை, மே 7) தொடங்க உள்ளது. மூன்றாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. குஜராத்தில் உள்ள சூரத் தொகுதியில் பாஜக ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால், 92 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெறும்.
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு எப்பொழுது?
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கும், அதேபோல இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதி கேரளா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. அதில் 1,351 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி அந்தந்த தொகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: மாநில வாரியான தொகுதிகளின் பட்டியல்:
அஸ்ஸாம்: துப்ரி, கோக்ரஜார், பார்பெட்டா, கௌஹாத்தி ஆகிய நான்கு தொகுதிகள்.
குஜராத்: கச், பனஸ்கந்தா, படான், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கெடா, பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பருச், பர்தோலி, சூரத் நவ்சாரி, வல்சாத் ஆகிய 25 தொகுதிகள்
கர்நாடகா: சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவாங்கேரே, ஷிமோகா ஆகிய 14 தொகுதிகள்
மத்தியப் பிரதேசம்: மொரேனா, பிந்த், குவாலியர், குணா, சாகர், விதிஷா, போபால், ராஜ்கர், பெதுல் ஆகிய 9 தொகுதிகள்
மகாராஷ்டிரா: பாரமதி, ராய்காட், தாராஷிவ், லத்தூர் (எஸ்சி), சோலாப்பூர் (எஸ்சி), மாதா, சாங்லி, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனாங்கிள் ஆகிய 11 தொகுதிகள்.
உத்தரப் பிரதேசம்: சம்பால், ஹத்ராஸ், ஆக்ரா (SC), ஃபதேபூர் சிக்ரி, ஃபிரோசாபாத், மைன்புரி, எட்டா, புடான், ஆன்லா, பரேலி ஆகிய 10 தொகுதிகள்,
மேலும் படிக்க - ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!
மேற்கு வங்கம்: மல்தஹா உத்தர், மல்தஹா தக்ஷின், ஜாங்கிபூர், முர்ஷிதாபாத் ஆகிய 4 தொகுதிகள்
பீகார்: ஜஞ்சர்பூர், சுபால், அராரியா, மாதேபுரா, ககாரியா ஆகிய ஐந்து தொகுதிகள்.
சத்தீஸ்கர்: சர்குஜா, ராய்கர், ஜாஞ்ச்கிர்-சம்பா, கோர்பா, பிலாஸ்பூர், துர்க், ராய்ப்பூர் ஆகிய 7 தொகுதிகள்.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி: யூனியன் பிரதேசமான இங்கு இருக்கும் ஒரு தொகுதி (தாத்ரா மற்றும் நகர் ஹவேலி)
டாமன் மற்றும் டையூ: யூனியன் பிரதேசமான இங்கு இருக்கும் ஒரு தொகுதி (டாமன் மற்றும் டையூ)
கோவா: மொத்தமுள்ள வடக்கு கோவா, தெற்கு கோவா என 2 2 தொகுதிக்கும் தேர்தல்
லோக்சபா தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: முக்கியத் தொகுதிகள் விவரம்
1. அஸ்ஸாம்- துப்ரி, கௌஹாத்தி
2. பீகார் - அராரியா, மாதேபுரா
3. சத்தீஸ்கர் - துர்க், பிலாஸ்பூர், ராய்ப்பூர்
4. குஜராத்- காந்திநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத் கச், காந்திநகர், வதோதரா
5. கர்நாடகா- தார்வாட், ஷிமோகா, சிக்கோடி, பெல்காம்
6. மத்தியப் பிரதேசம்- விதிஷா, பிந்த், குணா
7. மகாராஷ்டிரா- பாராமதி, தாராஷிவ், சோலாப்பூர் (SC), ராய்காட், கோலாப்பூர்
8. உத்தரப் பிரதேசம் - ஃபதேபூர் சிக்ரி, மெயின்புரி
9. மேற்கு வங்காளம் - ஜாங்கிபூர், முர்ஷிதாபாத்
லோக்சபா தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்
1. அமித் ஷா (பாஜக) - காந்தி நகர், குஜராத்
2. ஹஸ்முக்பாய் படேல் (பாஜக) - அகமதாபாத் கிழக்கு, குஜராத்
3. புர்ஷோத்தம் ரூபாலா (பாஜக) - ராஜ்கோட், குஜராத்
4. திக்விஜய சிங் (காங்கிரஸ்) - ராஜ்கர், மத்திய பிரதேசம்
5. சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) - விதிஷா, மத்திய பிரதேசம்
6. சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ் கட்சி- சரத் பவார்) - பாராமதி, மகாராஷ்டிரா
7. பிரணிதி ஷிண்டே (காங்கிரஸ்) - சோலாப்பூர், மகாராஷ்டிரா
8. ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக) - குணா, மத்திய பிரதேசம்
9. டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி கட்சி) - மைன்புரி, உத்தரபிரதேசம்
10. ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்) - பெர்ஹாம்பூர், மேற்கு வங்கம்
11. பிரகலாத் ஜோஷி (பாஜக) - தார்வாட், கர்நாடகா
12. கே.எஸ்.ஈஸ்வரப்பா (பாஜக) - ஷிமோகா, கர்நாடகா
13. பல்லவி டெம்போ (பாஜக) - தெற்கு கோவா, கோவா
லோக்சபா தேர்தல் 2024 வாக்கப்பதிவு ஆட்டவனை
லோக்சபா தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை அடுத்து, நான்காவது கட்ட தேர்தல் 96 தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளுக்கு மே 25 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ