தயங்கும் ராகுல், தயாராகும் ராபர்ட்: அமேதியில் நீடிக்கும் காங்கிரஸ் சஸ்பென்ஸ்!!
Lok Sabha Elections: நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்: ராபர்ட் வதேரா
Lok Sabha Elections: ஏப்ரல் 19 ஆம் தேதி, அதாவது இன்னும் 2 நாட்களில் 2024 மக்களவைத் தெர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் முழு மூச்சுடன் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. எனினும் இன்னும் சில தொகுதிகளில் வாக்காளர்களே அறிவிக்கப்படாத நிலையும். உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியும் அவற்றில் ஒன்று. ராகுல் காந்தியே அமெதியில் இருநு போட்டியிடுவார் என ஒரு சிலர் கூறினாலும், பிரியங்கா காந்தியின் கணவர், ராபர்ட் வத்ரா இங்கிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கலாம் என்றும் சமீபத்தில் சில நாட்களாக கூறப்பட்டு வருகின்றது.
எனது முழு குடும்பமும் நாட்டின் பணியில் ஈடுபட்டுள்ளது
திங்களன்று காலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பாங்கே பிஹாரி கோவிலுக்கு சென்று வழிபட்டார். தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா, "எனது முழு குடும்பமும் நாட்டின் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்போது வரப்போகும் தெர்தலுக்காக அவர்கள் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து அவற்றை தீர்க்க பாடுபடுவார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் உழைப்பு வெற்றி பெற வேண்டும்." என்று கூறினார்
"நாட்டின் குரலை உயர்த்தி, நாட்டு மக்களின் குரலுக்கு அங்கீகாரம் அளிக்க, மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். எனது பிரார்த்தனைகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நான் அரசியலில் இருக்க வேண்டுமா வேண்டாமா?
அமேதி மற்றும் ராய் பரேலி மக்களவைத் தொகுதிகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராபர்ட், "நாடு முழுவதிலுமிருந்து கோரிக்கை உள்ளது. எனது கடின உழைப்பை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள். எனது மதப் பயணங்களையும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். நான் அரசியலில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று அவர்கள் கூறியுள்ளார்கள். நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்." என்றார்.
மக்கள் நெருக்கடியில் கடவுளை நினைக்கிறார்கள்
ராமர் கோயில் குறித்து பேசிய ராபர்ட் வத்ரா, மக்கள் அனைத்து இடங்களையும் ஒரேபோல் தான் பார்க்கிறார்கள் என்றும், இதில் அரசியல் பேசக்கூடாது என்றும் கூறினார். பொதுவாக மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், கடவுளைத் தான் நினைக்கிறார்கள். எந்தத் தலைவரையோ, கட்சியையோ நினைப்பதில்லை. நாங்கள் பாரபட்ச அரசியல் செய்பவர்கள் அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி சனாதனத்திற்கு எதிரான கட்சி என்று பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டை பற்றி பேசிய ராபர்ட் வதேரா, அது அவர்களின் பிரச்சார உத்தி என்று கூறினார். "எனது முழு குடும்பமும் எந்த பாகுபாடும் காட்டாமல் இதிலிருந்து விலகி இருப்பதை நான் அறிவேன். நாங்கள் மதச்சார்பற்றவர்கள், மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைத்து நாட்டை மதச்சார்பற்றதாக வைத்திருப்போம்." என்று அவர் வலியுறுத்தினார். உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணி குறித்து ராபர்ட் கூறுகையில், "நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க வேண்டும். கூட்டணியை வலுவாக வைத்திருக்க முயற்சி எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
சமீபத்தில் அமேதி மக்கள், அங்கு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் தான் தேர்தல் களத்தில் இறங்க முடிவு செய்தால் அது அமேதியில் இருந்துதான் இருக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் பிரயங்கா காந்தி வத்ராவின் கணவர் ராபர்ட் வத்ரா கூறியுள்ளார். மேலும் அமேதியின் தற்போதைய எம்.பி ஸ்மிருதி இரானி, தொகுதியை புறக்கணித்து, காந்தி குடும்பத்திற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்த பதவியை தவறாகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க | சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ