Maoist Naxalites Encounter in Chhattisgarh : இந்தியாவை பொருத்தவரை, நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் குறிப்பாக, ராய்பூரை தலைநகராக கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை களையெடுக்கும் பணியில், பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கி சூடு:
சத்தீஸ்கரில் உள்ள கான்கேர் மாவட்டத்தில், நேற்று நக்சலைட்டுகளின் நடமாட்டம் தெரிந்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையின் போது, நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சூடு ஏற்பட்டுள்ளது.
29 பேர் சுட்டுக்கொலை:
இந்த துப்பாக்கி சூடு, நேற்று மதிய வேளையில் நடைப்பெற்றிருக்கிறது. ஏகே-47, INSAS வகை துப்பாக்கிகள் இன்னும் சில பயங்கர ஆயுதங்களை தீவிரவாதிகள் இதில் உபயோகப்படுத்தியதாக கூறப்படுகிறது. பினாகுண்டா எனும் கிராமத்திற்கு அருகே நடைப்பெற்ற இந்த சண்டையில், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மாவோயிஸ்டுகள் 29 பேர் இந்த சண்டையில் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மாவோயிஸ்டுகளின் தலைவர் ஷங்கர் ராவ்வும் உயிரிழந்துள்ளார். இவரது தலைக்கு ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சண்டையை அடுத்து, குற்றவாளிகள் பயன்படுத்திய பயங்கர ஆயுதங்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முழு பின்னணி:
இந்த பாங்கர என்கவுண்டர், நேற்று பிற்பகல்1:30 மணி அளவில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில், சத்தீஸ்கர் மாநில போலீசாரின் ஒரு பீவான ரிசர்வ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதே போல, கடந்த மாதம் இதே தற்போது துப்பாக்கி சூடு நடைப்பெற்ற மாவட்டத்திலேயே இன்னொரு துப்பாக்கி சூடு சம்பவமும் நடைப்பெற்றுள்ளது. இதில், தீவிரவாதி ஒருவரூம், ஒரு காவலரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது துப்பாக்கி, சில அதிபயங்கர வெடிபொருட்கள் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்றைய துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசிய போலீஸார், பாதுகாப்பு படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை எழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ