COVID-19 தொற்றுநோயால் எழுந்துள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை ஒரு வருடத்திற்கு 30 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை மக்களவை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது. 2 வருடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியும் இல்லை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா,  மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆட்சேபனைகளை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 


பிரதமர் (PM Narendra Modi) மற்றும் அவரது அமைச்சர்கள் குழு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2020-2021 நிதியாண்டிற்கான  தங்கள் சம்பளத்தை 30% குறைத்து பெறுவார்கள். மேலும், 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டி நிதியையும் நிறுத்தி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 


பல எம்.பி.க்கள் ஏற்கனவே தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியான, ஆண்டுக்கு ரூ .5 கோடி என்ற அளவிலான, கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக பயன்படுத்த உறுதி அளித்திருந்தனர்.


நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு ஆண்டுகளுக்கு  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


மேலும் படிக்க | India Happiness Report 2020: மகிழ்ச்சியான மாநிலம் எது.. சோகமான மாநிலம் எது..!!!


மக்களவை மற்றும் மாநிலங்களவையிலிருந்து இந்த தொண்டு தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். லாக்டவுன் மற்றும் பிற விஷயங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  சில அசாதாரண முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ”என்று ஜோஷி கூறினார்.


மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க அரசு முடிவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார். "கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசுடன் தொடர்பு படுத்தவோ அல்லது  அரசியலாக்கவோ  வேண்டாம் என்று அனைத்து எம்.பி.க்களிடமும்  கேட்டுக் கொள்ளுமாறு பிரமர் மோடி என்னிடன் கூறினார். " என திரு,ஜோஷி மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | இந்தியா எதற்கும் தயாராக உள்ளது: மக்களவையில் Rajnath singh


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR