இந்தியா மகிழ்ச்சி அறிக்கை 2020 (India Happiness Report 2020): இந்த கொரோனா (Corona) காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மகிழ்ச்சியாக உள்ள மாநிலம் எது என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், மிசோரம், பஞ்சாப், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ள மாநிலங்களாக இருப்பது தெரியவந்தது, அதாவது அந்த மாநில மக்க்கல் மகிழ்ச்சியாக உள்ளனர். பட்டியிலில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி கடைசியாக உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்களின் மகிழ்ச்சி அடிப்படையிலான தரவரிசையில், மிசோரம், பஞ்சாப், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
நாடு முழுவதும் மகிழ்ச்சியை அளவிடும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய முதல் அகில இந்திய மகிழ்ச்சி அறிக்கை, COVID-19 மக்கள் மனதில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது
பேராசிரியர் ராஜேஷ் கே பில்லனியா 2020 மார்ச் முதல் ஜூலை வரை 16,950 பேரை உள்ளடக்கிய நாடு தழுவிய கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Engineer's Day 2020: விசுவேசுவரய்யா ஜெயந்தி பற்றிய கேள்விப்படாத சுவாரசிய தகவல்கள்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மகிழ்ச்சி தரவரிசையில், மிசோரம், பஞ்சாப், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. பெரிய மாநிலங்கள் எனடுத்துக் கொண்டால், பஞ்சாப், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகியவை முதல் மூன்று மாநிலங்களாக உள்ளன. சிறிய மாநிலங்களில் மிசோரம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை மகிழ்ச்சியின் தரவரிசையில் முதல் மூன்று மாநிலங்களில் உள்ளன.
யூனியன் பிரதேசங்களில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவை மகிழ்ச்சி தரவரிசையில் முதல் மூன்று யூனியன் பிரதேசங்கள். இதில் திருமணமானவர்கள் திருமணமாகாதவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாகவும் முடிவுகள் காட்டுகின்றன.
மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ஹரியானா ஆகியவை COVID-19 மக்கள் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்திள்ளன, அதேசமயம் புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் நடுநிலையான மனநிலையில் உள்ளன. மணிப்பூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகியவை COVID-19 மக்களின் மகிழ்ச்சியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மேலும் படிக்க | தில்லி கலவரத்தில் பங்கு குறித்த விசாரணையை தவிர்க்கும் Facebook நிறுவனம்..!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR