மக்களவை தேர்தல் 2019 (லோக் சபா தேர்தல் 2019) முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கியுள்ளது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.


இந்தநிலையில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு (ஈ.வி.எம்.) இயந்திரத்தை ஜனசேனா எம்.எல்.ஏ. வேட்பாளர் மதுசூதன் குப்தா கீழே தூக்கி போட்டி உடைத்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுக்குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.


 



இதுக்குறித்து அவரிடம் கேட்டதற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படததால், அதை உடைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.