சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு ரூ.578 கோடி அளிக்க வேண்டும் என விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன்களை வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவான தொழிலதிபர் விஜய் மல்லையா மீது லண்டன் நீதிமன்றத்தில் அமலாக்க துறை வழக்கு பதிந்தது.


வங்கிகளில் வாங்கிய கடனை, விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து அவர் மீது தொடரப்பட்ட இவ்வழக்கின் மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.


இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த விமான நிறுவனத்திற்கு சுமார் 578 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


சிங்கப்பூரைச் சேர்ந்த POC ஏவியேஷன் என்ற நிறுவனம் KingFisher உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 3 விமானங்களை குத்தகைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்த விமானங்களுக்கு தருவதாக ஒப்புக் கொண்ட தொகையை KingFisher நிறுவனம் வழங்கவில்லை. 


இந்த விவகாரம் தொடர்பாக POC நிறுவனம் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த லண்டன் உயர் நீதிமன்றம், பணத்தை தரமறுப்பதற்கான எந்த முகாந்திரமும் மல்லையா தரப்பிற்கு இல்லை என்பதால் வட்டியுடன் சேர்த்து 90 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 578 கோடி ரூபாய் பணத்தை மல்லயா வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது!