போபாலில் கணேஷ் விசர்ஜனின் போது படகு கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி பலி; 12 பேரை காணவில்லை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கட்லாபுரா எனும் ஆற்றங்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 12 பேரை காணவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


இதுவரை 6 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். காவல்துறையினர் மாநில பேரிடர் அவசரகால பதிலளிப்புப் படை (SDERF) பணியாளர்கள் மற்றும் டைவர்ஸ் குழு தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 16 பேரில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், தற்போது வரை 11 உடல்களை மீட்டுள்ளோம். தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். உள்ளூர்வாசிள் கூறுகையில், இன்று காலை நீரில் படகு ஒன்றில் சிலர் பயணம் செய்தனர். ஆழம் அதிகமானதால் படகு தனது பேலன்சை இழந்தது. இதனால் படகில் பயணம் செய்தவர்கள் நீரில் மூழ்கினர்" என தெரிவித்துள்ளனர். 



 இந்த சம்பவம் அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மற்ற அதிகாரிகள் மற்றும் தொழில்முறை நீச்சல் வீரர்களுடன் குறைந்தது 40 பொலிஸ் சம்பவ இடத்தில் உள்ளனர். மாநில பேரிடர் மறுமொழி நிதியம் (SDERF) குழுவும் இந்த இடத்தில் உள்ளது, ”என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ASP) அகில் படேல் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.