Top 10 Candidate List In Madhya Pradesh: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் மத்திய பிரதேசத்தின் நிலை கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. மத்தியப் பிரதேசத்தின் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த 10 ஹெவிவெயிட் தலைவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட முக்கியமான 10 வேட்பாளர்கள் யார்? அவர்களை குறித்து பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) - புத்னி தொகுதி


செஹோர் மாவட்டத்தில் உள்ள புத்னி சட்டமன்ற தொகுதி தற்போதைய சிவராஜின் கோட்டையாகும். ஒவ்வொரு முறையும் போலவே இம்முறையும் சிவராஜ் சிங் இந்த தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் ராமாயணம் என்ற டிவி சீரியலில் அனுமன் வேடத்தில் நடித்த விக்ரம் மஸ்தாலை இம்முறை சிவராஜ் எதிராக நிறுத்தியுள்ளது. கடந்த 2018 தேர்தலில் சிவராஜை எதிர்கொண்ட அருண் யாதவ் 58,999 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


கமல்நாத் (காங்கிரஸ்) - சிந்த்வாரா தொகுதி


முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான கமல்நாத் சிந்த்வாராவி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பூந்தி சாஹு களம் கண்டுள்ளார். கடந்த தேர்தலில் சாஹு 44 சதவீத வாக்குகள் பெற்று 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


கைலாஷ் விஜயவர்கியா (பாஜக) - இந்தூர்-1 தொகுதி


இந்த முறை, இந்தூர்-1 சட்டமன்றத் தொகுதியில், ஆறு முறை எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக இருந்தவ நட்சத்திர வேட்ப்ளர் கைலாஷ் விஜயவர்கியாவை பாஜக களம் இறக்கியுள்ளது. 2008 சட்டமன்றத் தேர்தலில், இந்தூரின் அம்பேத்கர் நகர்-MH தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் 2013 தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். இந்தூரின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்ட அவர், தொடர்ந்து 6 இடங்களில் வெற்றி பெற்றார். இம்முறை இந்தூர்-1ல் இருந்து களமிறக்கப்பட்டு உள்ளார்.


மேலும் படிக்க - மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இதோ கருத்துக்கணிப்பு முடிவுகள்!


நரேந்திர சிங் தோமர் (பாஜக) - திமானி தொகுதி


நரேந்திர சிங் தோமரை சட்டசபை தேர்தலில் நிறுத்தியதன் மூலம் கட்சி மேலிடம் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இவர் மொரீனா மாவட்டத்தில் உள்ள டாடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.


பிரஹலாத் சிங் படேல் (பாஜக) நரசிங்பூர் தொகுதி


மகாகௌஷலின் நரசிங்பூர் தொகுதியில் பிரஹலாத் சிங் படேலை பாஜக நிறுத்தியுள்ளது. இவரது சகோதரர் ஜலம் சிங் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். பிரஹலாத் படேல் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.


ஃபக்கன் சிங் குலாஸ்தே (பாஜக) - நிவாஸ் தொகுதி


கடந்த இரண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, 2003 தேர்தல்களில் இருந்து தொடர்ந்து இந்தத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. இங்கு ஃபக்கன் சிங் குலாஸ்தியின் சகோதரர் ராம்பியாரே குலாஸ்தே மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தார். ஆனால் 2018ல் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் மார்ஸ்கோலிடம் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தகைய சூழ்நிலையில், இந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற ஃபக்கன் சிங் குலாஸ்தேவை கட்சி களமிறக்கியது.


மேலும் படிக்க - Chhattisgarh Assembly Election Result 2023: யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? முக்கியமான 10 முகங்கள்


ஜெய்வர்தன் சிங் (காங்கிரஸ்) - ரகோகர் தொகுதி


ஜெயவர்தன் முதன்முதலில் 2013 இல் ராகோகர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த ஆண்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவர் ஆவார். 2018ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018ல் கமல்நாத்தின் அரசு அமைந்தபோது, ​​அவருக்கு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.


ஜிது பட்வாரி (காங்கிரஸ்) - ராவு தொகுதி


ஜிது பட்வாரி கடந்த இரண்டு முறை ராவு சட்டமன்ற தொகுதியில் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்களுடன் வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை பாஜக மூத்த தலைவர் மது வர்மா மீண்டும் அவருக்குப் போட்டியாக களம் இறக்கப்பட்டு உள்ளார்.


நரோத்தம் மிஸ்ரா (பாஜக) - தாதியா தொகுதி


தாதியா சட்டமன்றத் தொகுதி 20 ஆண்டுகளாக பாஜக வசம் உள்ளது. 2003 முதல் பாஜக தொடர்ந்து இங்கு வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. மிஸ்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்த முறை மீண்டும் வெற்றி பெறுவாரா என எதிர்பார்ப்பில் பாஜக உள்ளது.


அஜய் சிங் ராகுல் (காங்கிரஸ்) - சுர்ஹத் தொகுதி


முன்னாள் முதல்வர் அர்ஜூன் சிங்கின் மகன் அஜய் சிங், 1998ல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் தொடர்ந்து இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998க்குப் பிறகு, 2003, 2008 மற்றும் 2013 தேர்தல்களில் அஜய் சிங் வெற்றி பெற்றார். இருப்பினும், 2018 இல் பாஜகவின் ஷரதேந்து திவாரி கடுமையான போட்டியில் அஜய் சிங்கைத் தோற்கடித்தபோது பெரும் வருத்தம் ஏற்பட்டது. இந்த முறை அவர் மீண்டும் களத்தில் உள்ளார். இந்தமுறை அவருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனக் காங்கிரஸ் வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க - INDIA கூட்டணியை சாய்த்ததா பாஜக...? Exit Poll சொல்வது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ