Madhya Pradesh Elections 2023: தற்போது நடந்து முடிந்துள்ள மத்தியப் பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. தற்போது 160 தொகுதிகளில் முன்னனியில் உள்ளது.  இன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்பு பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தார்.  "மோடி ஜி இங்கு பொதுக்கூட்டங்களை நடத்தி மக்களை கவர்ந்தார், அது மக்களின் இதயங்களைத் வென்றது. இரட்டை எஞ்சின் அரசாங்கம் சரியாக செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களும், இங்கு உருவாக்கப்பட்ட திட்டங்களும் மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. எங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு எல்லா இடங்களிலும் தெரிந்ததால், பா.ஜ.க.வுக்கு வசதியாகவும், பெரும்பான்மையாகவும் இருக்கும்" என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?


ஆரம்பகால வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து, மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியாவும் போபாலில் உள்ள தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இல்லத்திற்கு வந்தார். அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசின் நலத் திட்டங்களைப் பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது " மத்திய பிரதேசத்தை பொறுத்த வரையில், எங்கள் இரட்டை என்ஜின் அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பார்க்கும்போது மக்களின் ஆசீர்வாதம் எங்களிடம் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அவர்களின் ஆசிர்வாதம் பா.ஜ.,வுக்கு இருக்கும், நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.


முன்னாள் முதல்வர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் முதல்வராக முன்னிறுத்திய நிலையில், சட்டசபை தேர்தலில் பாஜக தனது முதல்வர் முகத்தை அறிவிக்கவில்லை.  ம.பி.யில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் பதவியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். புத்னி தொகுதியில் முன்னிலை வகிக்கும் சிவராஜ் சிங் சௌகான், மத்தியப் பிரதேசத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர். பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கச் சொன்னால், பாஜக உயர்மட்டத் தலைவர்கள் அவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 18 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.


பாஜக தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களான 'லாட்லி பெஹ்னா' மற்றும் 'முதல்வர் கிசான் நிதி' ஆகிய இரண்டு திட்டங்களுமே சமீபத்தில் வாக்காளர்களுக்கு லட்சக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம், சிவராஜ் சிங் சௌகான் ‘லட்லி பெஹ்னா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கினார், இது மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 1.3 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 நேரடியாக அனுப்புகிறது. ஆட்சிக்கு வந்தால், 'லாட்லி பெஹ்னா' திட்டத்தின் கீழ், மாதத்திற்கு 3,000 ரூபாயாக உயர்த்துவதாக உறுதியளித்தார். மேலும் சிலிண்டர் விலையை ரூ.450 ஆக குறைத்தார். இது அவரின் வெற்றிக்கு வழி வகுத்தது. இதேபோல், பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அவரது ‘லட்லி லக்ஷ்மி’ திட்டம், பெண் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமானது, முந்தைய மாநிலத் தேர்தல்களைப் போலவே இந்த முறையும் பாஜகவை தெளிவாக ஆதரித்துள்ளனர்.


மேலும் படிக்க - எம்எல்ஏக்களை பாதுகாக்க... காங்கிரஸ் போட்ட பக்கா பிளான்... பின்னணியில் சிவகுமார் - என்ன விஷயம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ