முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?

Madhya Pradesh Assembly Election Results 2023: 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் பாஜக 124 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 100 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 3, 2023, 10:16 AM IST
  • 124 இடங்களில் பாஜக முன்னிலை.
  • காங்கிரஸ் 100 இடங்களுடன் பின்தங்கியுள்ளது.
  • ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது பாஜக.
முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா? title=

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பாதிக் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி உள்ளது. ஆரம்பத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் சமநிலையில் இருந்தாலும், தற்போது பாஜக முன்னிலையில் உள்ளது. பாஜக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.  230 இடங்கள் கொண்ட சட்டசபையில் பாஜக 124 இடங்களை கைப்பற்றியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் 100 இடங்களுடன் பின்தங்கியுள்ளது, பாஜக ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. "மக்களின் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையுடனும், பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று சௌஹான் Xல் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Rajasthan Election Results 2023 Live: ராஜஸ்தானில் ஆட்சி யாருக்கு? சிறிது நேரத்தில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா, மக்களின் நம்பிக்கை பாஜகவுடன் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "முழுமையான முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். பிரதமர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், நலத்திட்டங்களும்தான் இத்தகைய ஆணையுக்குக் காரணம்" என்று கூறி உள்ளார்.  மேலும், சத்தீஸ்கரில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே இடைவெளி குறைவாகவே உள்ளது.

ராஜஸ்தானிலும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னிலை பாதி வழியைக் கடந்துள்ளது. காங்கிரஸ் 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று பாஜகவுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது. பாஜக 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ராஜஸ்தானில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ளன. எனினும், தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறினார். சத்தீஸ்கரில், பா.ஜ., - காங்., இடையே, இடைவெளி குறைவாக உள்ளது; தற்போது ஜேபி நட்டா தலைமையிலான பாஜக கட்சி முன்னிலையில் உள்ளது. தெலுங்கானாவில் கே.சந்திரசேகர் ராவின் பி.ஆர்.எஸ்.க்கு எதிராக காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பிஎஸ்பி மற்றும் ஆர்எல்டி தலா ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளன. இதற்கிடையில், கோட்டா வடக்கின் பாஜக வேட்பாளர் பிரஹலாத் குஞ்சல், தனது கட்சி ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறினார்.  "ராஜஸ்தான் ஆணையை வழங்கியுள்ளது, சிறிது நேரத்தில் படம் தெளிவாகிவிடும்," என்று அவர் கூறினார். முதல்வர் யார் என்ற கேள்விக்கு, "இது கட்சி மேலிடம் முடிவு செய்யும், வசுந்தரா ராஜே போன்ற பெரிய தலைவர்கள் உள்ளனர், வெளியில் இருந்து கொண்டு வர தேவையில்லை" என்றார். ராஜஸ்தானில் உள்ள 199 தொகுதிகளில் 1862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அசோக் கெலாட்டின் தவறான நிர்வாகமும் அநீதியும் தோற்கடிக்கப்படும் என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் சிபி ஜோஷி கூறினார்.

"பொதுமக்கள் பாஜகவை முழுப்பெரும்பான்மையுடன் ஆசீர்வதிப்பார்கள். தவறான நிர்வாகமும் அநீதியும் தோற்றுவிடும்; நல்லாட்சியும் நீதியும் வெல்லும்" என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் ANI க்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.  இருப்பினும் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா நம்பிக்கையுடன் இருந்தார். மூன்று கருத்துக் கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்றும், இரண்டு கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் தோற்கும் என்றும் தெரிவித்தன. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News