தெலங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் உற்சாகம்! பிஆர்எஸ் அமைதி, பாஜக லிஸ்ட்லயே இல்லை

Telangana Legislative Assembly Result: தெலுங்கானா மாநிலம் உருவான பின், ஆளும் கட்சியான பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? அல்லது காங்கிரசின் 'கை' உயருமா? இவர்கள் அனைவரின் கதி என்ன என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். யார் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை நோக்கி நகர்வார்கள் என்பது தெளிவாகும். 2023 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 3, 2023, 09:29 AM IST
  • தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி.
  • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 49 மையங்களில் நடைபெற்று வருகிறது.
  • பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
தெலங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் உற்சாகம்! பிஆர்எஸ் அமைதி, பாஜக லிஸ்ட்லயே இல்லை title=

Hyderabad Assembly Election Result 2023: நான்கு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநிலத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தெலங்கானா தேர்தலில் 119 சட்டசபை தொகுதிகளுக்கு பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 9 மணிக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை 49 மையங்களில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் வாக்குரிமையைப் பயன்படுத்திய 2.36 கோடி மக்களின் தீர்ப்பு வெளியாகவுள்ளது. 

தபால் வாக்கு எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருக்கப்போகிறது?

அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது இப்போது சுவாரஸ்யமான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர்கள் பதிவு செய்த தபால் வாக்குகள் எண்ணும் பணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை வாக்குப்பதிவு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாக்களித்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த முறை மாவட்டம் முழுவதும் 2416 ஊழியர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தினர்.

மேலும் படிக்க - Telangana Election Results 2023 Live : தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் இருக்குமா? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

தபால் வாக்கு செலுத்துபவர்கள் யார்?

மாவட்டத்திலுள்ள அவசர சேவை பிரிவுகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தேர்தல் கடமைகளை செய்பவர்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பணிபுரிபவர்களும், ராணுவத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் தபால் வாக்குகளை செலுத்துபவர்கள் ஆவார்கள். கடும் போட்டி நிலவும் இடங்களில் எந்தளவு தபால் வாக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என வேட்பாளர்கள் யோசித்து வருகின்றனர். 

இறுதி தேர்தல் முடிவுகள் மாலை 5 மணிக்குள் வெளியாகும்

ஆரம்பப் போக்குகள் யார் முன்னிலை வகிக்கிறார்கள், யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற விவரம் காலை 10 மணிக்குள் தெரிந்துவிடும் என எதிர் பார்க்கப்படுகின்றன. மேலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையும் நண்பகல் வேளைக்கு முன் காணலாம். தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தல் இறுதி முடிவுகள் மாலை 5 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தின் சட்டசபைக்கான 119 இடங்களில் 60 இடங்கள் ஆட்சி அமைக்க தேவை. தெலங்கானா சட்டசபை தேர்தலில் மொத்தம் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ்: யாருக்கு வெற்றி?

2018 தேர்தலில், தற்போதைய பிஆர்எஸ் (முன்பு டிஆர்எஸ்), 88 இடங்களை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது மற்றும் கட்சியின் தலைவர் கே சந்திரசேகர் ராவ் 2018 டிசம்பரில் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். தெலுங்கானா மாநிலம் உருவான பின், ஆளும் கட்சியான பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் அவர்களின் தொண்டர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். மறுபுறம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில் அந்தக் கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்க - தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், முதல்வர் பதவி யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News