நம்பிக்கை வாக்கெடுப்பு சில மணி நேரங்களுக்கு முன்பே பதவியை ராஜினாமா செய்த முதல்வர் கமல்நாத்
நம்பிக்கை வாக்கெடுப்பு சில மணி நேரங்களுக்கு முன்பே மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பதவியை ராஜினாமா செய்தார்
போபால்: 18 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்ததை அடுத்து மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசியல் ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடி தொடங்கியது. அம்மாநில எதிர்கட்சியான பாஜக, ஆளும் காங்கிரஸ் (Congress) பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதற்காக உச்ச நீதிமன்றம் (Supreme Court) கதவை தட்டியது.
இதனையடுத்து, இன்று மத்திய பிரதேச சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்களிப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்களிப்பு நடைபெற இருந்த நிலையில், மாநில முதல்வர் கமல்நாத் (CM Kamal Nath resign) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கமல் நாத் (Kamal Nath), "தனது எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். உண்மை வெளிவரும். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்று கமல் நாத் கூறினார். மாநிலத்தில் நெருக்கடி ஏற்பட பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
கடந்த 15 மாதங்களில் எனது பெரும்பான்மையை நான் பல முறை நிரூபித்தேன். பாஜக 15 ஆண்டுகள் ஆட்சி செய்தது. எனக்கு 15 மாதங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த 15 மாதங்களில், நான் மாநிலத்திற்காக பொது நலப் பணிகளைச் செய்துள்ளேன் என்பதற்கு மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனும் சாட்சி. ஆனால்
எங்கள் அரசாங்கம் செயல்படும் விதத்தை பார்த்து, அவர்களால் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என்று அஞ்சிய பாஜக, எங்கள் அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டத்தை மேற்கொண்டனர் என்று கமல்நாத் மேலும் கூறினார்.
400 வாக்குறுதிகளை 15 மாதங்களில் முடித்தோம். 15 மாதங்களில், நாங்கள் மாஃபியா இல்லாத மாநிலமாக மாற்றினோம். இதை நாங்கள் செய்யததை பாஜக விரும்பவில்லை. பாஜகவின் 15 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும்.
பாஜகவினர் மாநில மக்கள் துரோகம் செய்யதுள்ளனர். இந்த துரோகம் மத்திய பிரதேச மக்களுக்கு நடந்துள்ளது. கட்சியின் ஒரு முக்கியத் தலைவர் மற்றும் 22 எம்எல்ஏக்களை தன்வசமாக்கி பாஜக சதி செய்தது. அவர்கள் எங்கள் எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர் என்று காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறினார்.
மத்தியப் பிரதேச சட்டசபையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இப்போது 206 ஆகும். பாஜகவில் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர், காங்கிரசில் சபாநாயகர் உட்பட 92 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போதைய நிலையில் பெரும்பான்மை எண்ணிக்கை 104 ஆகும்.
அதன்பிறகுதான் தனது பதிவியை ராஜினாமா (Kamal Nath resign) செய்வதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.