சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 28, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை 1200 சி.சி.டி.வி. கேமராக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு 51 மாவட்டங்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்று முடிவுகளும் தனியாக அறிவிக்கப்படும். சுற்றுவட்டத்தின் முடிவுகள் ஏற்கனவே முன் அறிவிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அடுத்த சுற்று எண்ணப்படும். 


வாக்கு பதிவு முடிவடைந்த பின்னர், வெளியான கருத்து கணிப்புப்படி 15 ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 




> வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியது.


> முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும்.


> 230 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 306 மண்டலங்களில் நடைபெறும்.


> மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் 2899 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


> மொத்தமுள்ள 230 இடங்களில் அனைத்து இடங்களில் பா.ஜ.க. தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 229 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியதுடன், அதன் கூட்டாளியான சரத் யாதவின் ஜனநாயக ஜனதா தளத்திற்காக ஒரு இடத்தை தந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 208 இடங்களில் போட்டியிடுகின்றது. பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி) 227, சிவசேனா 81, சமாஜ்வாதி கட்சி 52 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.


> மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தனது பாரம்பரிய தொகுதியான் புத்னியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவருமான அருண் யாதவ் போட்டியிட்டுள்ளார். முதலமைச்சர் சிவராஜ் சிங் நான்கு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார், ஒவ்வொரு முறையும் அவர் இந்த தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.