3வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்... மகாராஷ்டிராவில் ஷாக் - பின்னணி என்ன?
National News Latest Updates: மகாராஷ்டிரா சட்டப்பேரவை துணை சபாநாயகர் தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
National News Latest Updates: மகாராஷ்டிராவின் தலைமை செயலகத்தில் இன்று ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் மகாராஷ்டிர சட்டப்பேரவை துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக எம்பி என நான்கு பேர் தலைமை செயலகத்தின் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பேரதிரிச்சியை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் அவர்கள் தற்கொலை முயற்சிகளை தடுக்க கீழே அந்தரத்தில் விரிக்கப்பட்டிருந்த பெரிய வலையில் குதித்ததால் அவர்கள் உயிர் தப்பின்னர். அவர்கள் ஏன் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர், அங்கு எப்படி வலை வந்தது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால் அவர் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பிரிவை சேர்ந்தவர் ஆவார். அவருடன் பாஜக எம்.பி., மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் நான்கு பேர் மந்திராலயா என்றழைக்கப்படும் மகாராஷ்டிராவின் சட்டப்பேரவையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே அந்தரத்தில் கட்டப்பட்டிருந்த வலைக்குள் குதித்தனர்.
வீடியோ வைரல்
தன்கர் என்ற சமூகத்தை பட்டியல் பழங்குயின (ST) பிரிவுக்கு மாற்றக்கோரி எழுந்துள்ள கோரிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர். மந்திராலயாவில் தற்கொலை முயற்சிகளை தடுக்க, அந்தரத்தில் பெரிய வலைகளை கட்டியிருக்கின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து இந்த வலைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வலையில் குதித்ததால் யாருக்கும் எவ்வித காயங்களும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வலைக்குள் குதித்த பின்னர் மீண்டும் அப்படியே அந்த கட்டடத்திற்குள் ஏறினர். இதுகுறித்த வீடியோவும் வெளியாகி வருகிறது.
மேலும் படிக்க | ஒரு பக்கம் போனஸ், மறுபக்கம் போராட்டம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!
முன்னதாக, சில பழங்குடியின எம்எல்ஏக்கள் சிலர் மகாராஷ்டிரா தலைமை செயலகம் மந்திராலயாவின் வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தினர். இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது எம்எல்ஏக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மட்டுமின்றி துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவந்திர ஃபாட்னாவிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முழு பின்னணி என்ன?
அதாவது, தன்கர் சமூகம் தற்போது பிற பிற்படுத்தப்பட்ட சமூகம் (OBC) பிரிவில் உள்ளது. அந்த வகையில், சோலாபூர் மாவட்டத்தில் பந்தர்பூர் நகரில் தன்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அவர்களின் சமூகத்தை ST பிரிவில் சேர்க்கக் கூறி தொடர்ந்து கோரிக்கை வத்து வந்தனர். போராட்டமும் நடைபெற்றது. மேலும், சில மாநிலங்களில் பட்டியல் பழங்குடியின பிரிவில் உள்ள தங்கட்ஸ் சமூகமும், தங்களின் சமூகத்தை போன்றுதான் என்றும் எனவே அவர்களை போன்று எங்களையும் ST பிரிவில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்தினர். அந்த வகையில், இந்த கோரிக்கையை எதிர்த்துதான் இன்று நான்கு பேர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டான நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ளன. மறுபுறம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | திடீரென அதிகரித்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், மாயாஜாலமா இருக்கே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ