Maharatra Gas Leak: மகாராஷ்டிராவின் அம்பர்நாத் பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இருந்து இரசாயன வாயு கசிந்ததால், மொத்தம் நகரமும் காற்று மாசுப்பட்டு சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கிறது. இரசாயன வாயு கசிவால் அப்பகுதி மக்கள் சிலருக்கு கடமையான கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டை புண் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அங்குள்ள இரசாயன தொழிற்சாலையில் இருந்து நேற்றிரவு வாயு கசிந்துள்ளது. அங்கிருந்து வெளியாகும் பல வீடியோக்களில் நகர் முழுவதும் வாயு காற்றில் பரவியிருப்பதை காண முடிகிறது. காற்றில் ஏற்பட்டுள்ள இந்த மாசுபாடு எத்தனை நாள்கள் நீடிக்கும், என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. மும்பையில் இருந்து சுமார் 45 கி.மீ., தூரத்தில் புறநகர் பகுதியில் இருந்து நேற்று இரவு 11 மணியளவில் இந்த கடும் புகை காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



அதிகாரிகள் கூறுவது என்ன?


ரசாயன வாயு கசிவு காரணமாக அம்பர்நாத் நகரில் வசிப்பவர்கள் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு நடமாடுவதை காண முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புகை பரவி பெரும் பகுதிகளை சூழ்ந்துள்ளது. ரயில் பாதையையும் இந்த வாயு அடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் நிலைமை இன்னும் மோசமடைந்தால் மக்களை இங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை இது சிக்கலாக்கும் என்றும் கூறப்படுகிறது. பரவிவரும் இந்த பாதிப்பை நிவர்த்தி செய்ய  அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். மேலும் வாயு பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | இந்திராவை ராஜினாமா செய்ய வைத்த சீதாராம் யெச்சூரி - புகைப்படத்தின் பின் உள்ள வரலாறு!


நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் இதுவரை தீவிர பாதிப்பால் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் தானே முனிசிபல் கார்ப்பரேஷனின் பேரிடர் மேலாண்மை பிரிவுத் தலைவர் யாசின் தத்வி ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும், வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் உள்ள பாஸ்பரஸ் அடிப்படையிலான வாயு கசிந்ததால் அடர்த்தியான வெள்ளை புகையை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வாயு கசிவுக்கு பின் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


போபால் விஷவாயு கசிவு சம்பவம்


மகாராஷ்டிராவில் நடந்த இந்த சம்பவம், இந்தியாவின் மிக மோசமான தொழில்துறை பேரழிவுகளில் ஒன்றான 1984 போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை நினைவுப்படுத்தியதாக மக்கள் அச்சம் தெரிவித்தனர். இருப்பினும், இதில் அந்தளவிற்கு பாதிப்பில்லை என்பது நாம் கவனிக்கத்தக்கது. 


1984ஆம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் சுமார் 3 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலையில் இருந்து 40 டன் மெத்தில் ஐசோசயனேட் வாயு கசிந்ததால் இந்த துயரம் நடந்தேறியது. இந்த விஷவாயு கசிவால் உயிரிழப்புகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியும் நினைவுக்கூரத்தக்கது. 


மேலும் படிக்க | 'ராஜினாமா செய்ய தயார்...' ஷாக் கொடுக்கும் மம்தா பானர்ஜி - என்னாச்சு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ