டிகிரி முடிந்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.10000 உதவித்தொகை! மாநில அரசு அறிவிப்பு!
Ladla Bhai Yojana Scheme: மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு பல சலுகைகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
Ladla Bhai Yojana Scheme: மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கட்சிகளும் அதற்கான வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், மாநில அரசு இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு 'லாட்லா பாய் யோஜனா' (Laadla Bhai Yojana) என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தகுதியுள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகையை வழங்க உள்ளது. இதன் மூலம் பலர் பயனடைய உள்ளனர். இதற்கு முன்பே பெண் வாக்காளர்களை கவரும் விதமாக 'மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா' (Majhi Ladki Bahin Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் தகுதி உள்ள பெண்கள் அனைவரும் மாதம் ரூ. 1,500 உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க | பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! அதுவும் இந்த காரணத்திற்காக!
லாட்லா பாய் யோஜனா திட்டத்தின் சிறம்பம்சங்கள்
மகாராஷ்டிரா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 'லாட்லா பாய் யோஜனா' (Laadla Bhai Yojana) திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கு உதவி தொகை கிடைக்க உள்ளது. இந்த லாட்லா பாய் யோஜனா திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகையும், டிப்ளமோ படித்துள்ள மாணவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பெண்களுக்கான சிறப்பு திட்டம்
'மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா' (Majhi Ladki Bahin Yojana) என்ற திட்டத்தின் மூலம் 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுடைய பெண்களுக்கு மாநில அரசு மாதம் ரூ.1,500 உதவித்தொகையை வழங்கி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள, வருமானம் பெற இயலாமல் இருக்கும் பெண்களை மையப்படுத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு சுதந்திரம், தன்னம்பிக்கை, வாழ்க்கையில் மேம்பாடு அடைய இந்த திட்டம் உதவும் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதே போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் மகாராஷ்டிராவிலும் நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆளும் மாநில அரசு தோல்வியை சந்தித்து இருந்தது. மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 30 இடங்களை எதிர்க்கட்சி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ