இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா - மாமனார் கொடுத்த கல்யாண பரிசு... எவ்வளவு தெரியுமா?

Isha Ambani Piramal: முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணமான போது, அவரின் கணவர் குடும்பத்தினர் அரேபிக்கடலை பார்த்தவாறு அமைந்திருக்கும் சொகுசு பங்களாவை பரிசளித்திருந்தனர். அந்த பங்களா குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 15, 2024, 11:21 AM IST
  • இதன் மதிப்பு சரியாக தெரியவில்லை.
  • இந்த பங்களா மும்பையில் உள்ளது.
  • 2018இல் இஷா அம்பானிக்கு திருமணம் ஆனது.
இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா - மாமனார் கொடுத்த கல்யாண பரிசு... எவ்வளவு தெரியுமா? title=

Isha Ambani Piramal Luxurious House: ஊரே பேசும் அளவிற்கு தனது மகன்/மகளுக்கு திருமணம் செய்துபார்க்க வேண்டும் என்பதே பல பெற்றோரின் ஆசையாக இருக்கும். அந்த வகையில், முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தையும் சரி, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களையும் சரி உலகமே பார்த்து வாய்ப்பிளக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார் எனலாம். 

ஆனந்த் அம்பானி - ராதிகா அம்பானி ஆகியோரின் திருமண விழா கடந்த ஜூலை 12ஆம் தேதி முதல் நேற்று வரை மும்பையில் உள்ள ஜியோ வோல்ர்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த மூன்று நாள் திருமண விழாவில் பல்வேறு தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் உலகம் முழுவதில் இருந்தும் கலந்துகொண்டு இணையர்களை வாழ்த்திச் சென்றனர்.

ஆனந்த் அம்பானி திருமணச் செலவு

இதற்கும் முன்னதாக திருமணத்திற்கு 10 நாள்கள் முன்பிருந்து பல்வேறு நிகழ்வுகளும், சடங்குகளும் நடந்தன. அதுமட்டுமின்றி, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம் நகரிலும், மே மாதம் பிரான்ஸ் - இத்தாலி இடையே கடலில் சொகுசு கப்பலிலும் இரண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் படிக்க | அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!

திருமண விழாவுக்கும் சரி, இந்த இரண்டு கொண்டாட்ட விழாவுக்கும் சரி பல்வேறு உச்ச கலைஞர்கள் பங்கேற்று பெர்ஃபாமன்ஸ் செய்த நிலையில், அவர்களுக்கும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. மேலும், விருந்தினர்கள் தங்கும் செலவு, அவர்களுக்கென தனி விமானம் செலவு என மொத்தமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு மட்டும் 4,000 கோடி ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு சொகுசு வில்லா

அம்பானி குடும்பத்தினர் தங்களது இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்டை வரவேற்கும் விதமாக அவருக்கு துபாயில் சுமார் 640 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள வில்லா ஒன்றை பரிசளித்திருந்தனர். 70 மீட்டருக்கு பிரைவேட்டான கடற்கரை, சொகுசு வசதிகள் நிறைந்த 10 படுக்கை அறைகள், இத்தாலிய மார்பில்களான மிகவும் ரம்மியமான உள்வேலைப்பாடுகள் நிறைந்த வில்லாவாகும். 

இஷா அம்பானிக்கு கொடுக்கப்பட்ட பரிசு

அந்த வகையில், அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கு திருமணம் நடைபெற்றபோது, அவரின் கணவர் வீட்டில் இருந்து கொடுத்த பரிசும் சிறப்பான ஒன்றாகும். 2018ஆம் ஆண்டு இஷா அம்பானிக்கு, ஆனந்த் பிரமல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சுவாதி பிரமல் மற்றும் அஜய் பிரமல் ஆகியோர் இஷா அம்பானிக்கு 50 ஆயிரம் சதுர அடியில் Gulita என்ற கடலோரமான தனி சொகுசு பங்களாவை பரிசளித்தன.

சொகுசு பங்களாவின் மதிப்பு

மும்பையின் மிக அழகிய மற்றும் முக்கிய பகுதியில் நீண்டு விரிந்திருக்கும் அரபிக்கடலை பார்த்தவாறு அந்த பங்களா அமைந்திருக்கிறது. அந்த வீட்டில் இருந்து பிரம்மாண்ட அளவில் அந்த கடலை உங்களால் பார்க்க முடியும். இந்த சொகுசு பங்களாவின் அப்போதைய விலை எவ்வளவு என்று சரியாகத் தெரியவில்லை. இருப்பினும், 2012ஆம் ஆண்டிலேயே ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்திடம் இருந்து சுமார் 452.5 கோடி ரூபாய் கொடுத்து பிரமல் குடும்பத்தினர் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வசதிகள் என்னென்ன?

Gulita என்றழைக்கப்படும் இந்த சொகுசு பங்களாவின் முக்கிய அம்சமே வைரம் போன்ற வடிவில், முப்பரிமாண வடிவமைப்பில் வெளிப்புறம் இரும்பு மற்றும் தரமான கண்ணாடிகளால் கட்டடப்பட்டுள்ளது. இந்த  தனித்துவமான கட்டடத்தை Eckersley O'Callaghan என்ற லண்டனை சேர்ந்த பொறியியல் கட்டுமான நிறுவனம் கட்டியுள்ளது.  

இந்த பங்களாவில் மொத்தம் 5 மாடிகள் உள்ளன. மேலும் மூன்று கீழ்தளங்கள் உள்ளன. இதில் அவர்களின் சொகுசு கார்கள், வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது. பரந்து விரிந்த புல்வெளி, பிரம்மாண்ட நீச்சல் குளம் மற்றும் இரட்டை உயரம் கொண்ட பல்நோக்கு அறைகள் என இந்த வீட்டில் பல்வேறு வசதிகளும் வழங்கப்பபட்டுள்ளன.

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News