மகாராஷ்டிரா எம்.எல்.ஏ நிதேஷ் ரானே, பொறியாளர் மீது சேற்றை வீசிய சம்பவம் தொடர்பாக 16 ஆதரவாளர்கள் கைது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலம் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை அரசு பொறியாளர் பிரகாஷ் ஷேதேகர் ஆய்வு செய்தார். அப்போது கன்கவில் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.ஏ.வும், முன்னாள் முதலமைச்சர் நாராயண ரேனின் மகனுமான நிதிஷ் ரானே அப்பகுதி வந்தார். தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்த ரானே, அப்பகுதி சாலை வசதிகள் முறையாக செய்துத்தரப்படவில்லை என்று கூறி முற்றுகையிட்டார். இதன் காரணமாக எம்.எல்.ஏ மற்றும் பொறியாளர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதனைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ நிதிஷ், மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொறியாளர் மீது சேற்றை ஊற்றியதுடன், அவரை அருகில் உள்ள பாலத்தில் கட்டி வைக்கவும் முயற்சித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பொறியாளர் பிரகாஷ் ஷடேகர், குடால் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து, நிதிஷ் ரானே மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நிதிஷ் ரானேவும் அவர் ஆதரவாளர்கள் 16 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிதிஷ், காவல் நிலையத்தில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரியை, பாஜக எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்கியா கிரிக்கெட் பேட்டால் தாக்கிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.