Fire Breakout in Nashik : மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் நகரில் உள்ள தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாஷிக் நகரின் முந்தேகான் கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் உள்ள பெரிய கொதிகலன் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தீ விபத்து சம்பவம் இன்று காலை 11 மணிக்கு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தீ விபத்தை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இதுவரை 11 பணியாளர்களை உள்ளே இருந்து மீட்டுள்ளோம். இன்னும் சில பேர் உள்ள மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார். 



கொதிகலன் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது என கூறப்பட்டாலும் அதுகுறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பாதுகாப்பான முறையில் மீட்புப் பணிக் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் கடுமையாக தீ எரிந்துகொண்டிருப்பதும், வானமே கரும்புகையால் சூழந்திருப்பம் சம்பவ இடத்தில் வெளிவரும் வீடியோக்களின் மூலம் தெரிகிறது .


இதுகுறித்து வருவாய் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தொழிற்சாலையில் ஏதோ வெடித்து தீ விபத்துக்கு வழிவகுத்தது. சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 


வழக்கமாக, அந்த ஆலையில் 20 முதல் 25 பேர் பணிபுரிகின்றனர். ஆனால், புத்தாண்டின் முதல் நாள் என்பதால், இன்று ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வளாகத்தில் பெரிய அளவில் புல் வளர்ந்திருப்பதாலும், தீப்பற்றக்கூடிய பொருட்கள் நிறைந்திருப்பதாலும் தீயை கட்டுப்படுத்துவதே எங்களின் முதல் நோக்கம். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கு சிறிது நேரம் எடுக்கும்" என்றார்.


மேலும் படிக்க | Cyber Job Crime: நாட்டின் மிகப் பெரிய மோசடி அம்பலம்! அதிர வைக்கும் ’அரசு வேலைவாய்ப்பு’


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ