மும்பை: மகாராஷ்டிராவில் அதிகாரப் போட்டி நடந்து வரும் நிலையில், முக்கியச் செய்தி வெளியாகியுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரே பேஸ்புக் மூலம் மக்களுடன் உரையாடுவார். உத்தவ் தாக்கரே பேஸ்புக் மூலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாலையில் முதல்வர் என்ன அறிவிப்பார் என்பதில் அனைவரும் கவனம் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு அரசுக்கு நெருக்கடி குறையும் என எதிர்பார்த்த நிலையில், மேலும் சிக்கலாகி வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி எம்.எல்.ஏ-க்கள் தற்போது தங்கள் நிலையை உறுதிபடுத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு சிவசேனாவால் சட்டமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஷிண்டே ஆதரவாளர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் மகாராஷ்டிர சட்டப் பேரவையின் துணை சபாநாயகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் சுயேச்சைகள் உட்பட 34 எம்எல்ஏக்களின் கையெழுத்து போட்டுள்ளனர்.


மேலும் படிக்க: 46-ஆ? 35-ஆ? உண்மை என்ன.. பாஜக பக்கம் சாய்ந்த 'அந்த' எம்எல்ஏக்களின் முழு பட்டியல்


இன்று மாலை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெறவுள்ள கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை "சட்டவிரோதமானது" என்று ஷிண்டே ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவசேனாவுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள எம்எல்ஏக்களின் அணுகுமுறையை கருத்தில் கொண்டு, மாலை மாலை நடக்கும் கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தொனியில் சிவசேனா சார்பில் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில், ‘வர்ஷா’வில் (முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ இல்லம்) அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கோவிட் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் தாக்கரே, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க: நான் கடத்தப்பட்டேன்! நான் உத்தவ் தாக்கரேவுடன் இருக்கிறேன்: கட்சிக்கு திரும்பிய சிவசேனா எம்எல்ஏ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR