மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில், மகாராஷ்டிராவின் 18 மாவட்டங்களில் லாக்டவுன் அன்லாக் (Lockdown Unlock) செய்யலாம் என பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 5% க்கும் குறைவாகவோ அல்லது ஆக்ஸிஜன் படுக்கைகள் 25% க்கும் குறைவாக நிரம்பி இருக்கும் மாநிலத்தின் 18 மாவட்டங்களில், ஜிம்கள், மால்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், திரைப்பட படப்பிடிப்பு, திருமண விழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் 5 நிலைகளாக மாநில அரசு பிரித்துள்ளது. இதில், மாநில தலைநகர் மும்பை (Mumbai Lockdown) நிலை -2 இல் இடம்பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த மாவட்டம் எந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது


நிலை 1- அவுரங்காபாத், நாசிக், பண்டாரா. புல்தானா, நாக்பூர், நந்தேத், நாசிக், தானே, பர்பானி, கோண்டியா, கட்சிரோலி, வர்தா, வாஷிம், சந்திரபூர், லாதூர், யவத்மால், துலே ஜல்னா.


நிலை 2- மும்பை, மும்பைசப்-டவுன், அமராவதி, ஹிங்கோலி, நந்தூர்பர், அகமதுநகர்


நிலை 3- கோலாப்பூர், சாங்லி, அகோலா, ரத்னகிரி, உஸ்மானாபாத், பீட், சிந்துதுர்க்


நிலை 4- புனே, ராய்கர்


ALSO READ |  நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்: வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்


நாளை முதல் அன்லாக் விதிகள் பொருந்தும்


நிலை ஒன்றில் இடம்பெற்றுள்ள மாவட்டங்கள் முழுமையாக (unlocked maharashtra) திறக்கப்படும் என்று அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெளிவுபடுத்தியுள்ளார். இங்குள்ள ஒவ்வொரு அலுவலகத்திலும் 100% வருகை இருக்கும். இருப்பினும், தொற்று விகிதம் 5 சதவீதத்திற்குள் இருப்பதை கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையர் கவனித்துக் கொள்ள வேண்டும். மும்பை முழுமையாக திறக்கப்படுவதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கலெக்டர் மற்றும் கமிஷனர் உள்ளூர் மட்டத்தில் கொரோனா பாசிடிவ் விகிதத்தை மதிப்பாய்வு செய்வார்கள். 


தற்போது மும்பையில் கொரோனா பாசிடிவ் (mumbai coronavirus cases) ரிப்போர்ட் விகிதம் 5.53 சதவீதமாக உள்ளது. எனவே, அடுத்த வாரத்திற்குள் மும்பையும் முழுமையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புனே மற்றும் ராய்காட் மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று


புனேவில் தொற்று விகிதம் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, புனே நிலை -4 இல் இடம் பெற இதுவே காரணம். புனேவிலேயே அதிகபட்சமாக கருப்பு பூஞ்சை (Black Fungus) பாதிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ராய்காட் மாவட்டத்திலும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அங்கு தொற்று விகிதம் 18 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.


RTPCR சோதனை கட்டாயமாகும்


மகாராஷ்டிராவுக்கு வருவதற்கு முன்பு மற்ற நாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வருபவர்கள் ஆர்டி பி.சி.ஆர் சோதனைக்கு (RTPCR Test)  உட்படுத்தப்படுவது கட்டாயமாக இருக்கும். இந்த முடிவை மகாராஷ்டிரா மாநில அரசு திரும்பப் பெறவில்லை.


ALSO READ |  மக்களே உஷார், பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1,200 அபராதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR