Maharastra Bus Accident: மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்தனர் கோர சம்பவம் இன்று அரங்கேறியது. இத்தனை பேரின் மரணத்திற்கு வழிவகுத்த இந்த மோசமான விபத்தில் இருந்து சில கண்ணாடியை உடைத்து தப்பித்தும் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள சிந்த்கத்ராஜா அருகே சம்ருத்தி விரைவுச் சாலையில் நாக்பூரில் இருந்து புனே நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்த 33 பேரில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக என்று போலீசார் தெரிவித்தனர். 


இந்த பேருந்து விபத்தில் உயிர் தப்பிய சில அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர் கூறுகையில்,"அந்த பேருந்தின் டயர் வெடித்து, வாகனம் ஒரு கம்பத்தில் மோதி உடனடியாக தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ பரவியது. எனக்கு அருகில் அமர்ந்திருந்த பயணியும், நானும் பின்பக்க ஜன்னலை உடைத்து பேருந்தில் இருந்து தப்பினோம்" என்றார்.


மேலும் படிக்க | மூன்றாவது முறையாக மோடி... 543 தொகுதியும் இலக்கு - பாஜகவின் பிளான் என்ன?


விபத்து நடந்ததைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக உயிர் பிழைத்தவர் கூறினார். நான்கைந்து பயணிகள் பேருந்தின் ஒரு கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும், ஆனால் அனைவராலும் அதை செய்ய முடியவில்லை என்றும் உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.


மேலும் அவர் கூறியதாவது,"பேருந்தில் இருந்து வெளியே குதித்தவர்கள் பின்னர் எங்களிடம், மக்கள் தீக்காயமடைந்ததால் நெடுஞ்சாலையில் உள்ள மற்ற வாகனங்களின் உதவியை நாடியதாக எங்களிடம் கூறினார், ஆனால் யாரும் நிறுத்தவில்லை. இந்த வழித்தடத்தில் பிம்பால்குடாவில் பல விபத்துகள் நடக்கின்றன. நாங்கள் உதவிக்கு அழைக்கப்பட்டோம், நாங்கள் அங்கு சென்றபோது, பயங்கரமான காட்சிகளை பார்த்தோம். டயர்கள் வெடித்திருந்தன" என்றார்.


"உள்ளே இருந்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியேற முயன்றனர். மக்கள் உயிருடன் எரிவதைக் கண்டோம். தீ மிகவும் உக்கிரமாக இருந்ததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நாங்கள் கண்ணீர்விட்டு கதறினோம். நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்கள் உதவிக்காக நின்றிருந்தால், மேலும் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார். பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் காயமடைந்த பயணிகள் அனுமதிக்கப்பட்ட புல்தானா மருத்துவமனைக்கு வந்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | அரிசியை பணமாய் கொடுக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா! இலவச அரிசி திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ