மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்நாள் கொண்டாட்டத்திற்கான பிரத்தியேக லோகோவினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள் வெளியிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஷ்டிரபதி பவனில் இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி அவர்களின் 150-வது பிறந்தநாளினை நினைவுகூறும் விதமாக இந்த ப்ரத்தியேக லோகோ வெளியிடப்பட்டுள்ளது.



மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவினை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த செப்டம்பர் 15-ஆம் 'ஸ்வட்ச்த ஹீ சேவா' பிரச்சார இயக்கத்தினை துவங்கி வைத்தார். இந்த இயக்கமானது வரும் அக்டோபர் 2-ஆம் நாள் வரை செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் மகாத்மா அவர்களின் 150-வது பிறந்தநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்படும் அதே வேலையில் தூய்மை இந்தியா திட்டம் தனது 4-வது ஆண்டினை நிறைவு செய்கிறது. இந்நிலையில் இந்த ஸ்வட்ச்த ஹீ சேவா பிரச்சார இயக்கம் மூலம் மகாத்மா அவர்களின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தினை அவரது பிறந்தநாளில் எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதேப்போல் நாடுமுழுவதிலும் மாநில அரசுகள் தங்களது மாநிலங்களில் பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், காந்தி ஜெயந்தி அன்று ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கொண்ட்டத்திற்கு பிரத்தியேக லோகோவினை குடியரசு தலைவர் வெளியிட்டுள்ளார்!