இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைனை தேர்ந்தெடுப்பதன் முக்கிய காரணம்!
இந்திய மாணவர்கள் மருத்துவம் படிப்பில் சேர அதிகளவில் உக்ரைனில் உள்ள கல்லூரிகளையே தேர்வு செய்கின்றனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை பலரையும் நடுநடுங்க செய்து இருக்கிறது, இதில் உக்ரைனில் மருத்துவம் பயில சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலரும் தங்களது தாயகம் திரும்ப போராடி வருகின்றனர். நாளுக்கு அவர்கள் அங்கு அனுபவிக்கும் இன்னல்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்க செய்து வருகிறது. பெரும்பாலான இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில ஏன் உக்ரைனை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா..
இந்தியாவில் மருத்துவம் பயில அதிகளவில் செலவாகிறது, அதுமட்டுமல்லாது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தான் மருத்துவம் படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் உக்ரைன் அல்லது ரஷ்யாவை பொறுத்தவரை இந்தியாவை காட்டிலும் அங்கு மருத்துவ படிப்பிற்கான செலவு குறைவாகவே இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியா வந்தவுடன் இங்கு நடைபெறும் நுழைவு தேர்வில் பங்குபெற்று தேர்ச்சி பெற வேண்டும், அவ்வாறு இந்த தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளிலும் எம்பிபிஎஸ் படிக்க அதிகளவில் செலவாகிறது, உக்ரைன் போன்ற நாடுகளில் மாணவர்களுக்கு தேவையான செலவுகளுடன் ஐந்தரை முதல் ஆறு ஆண்டுகள் வரை எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவாகாது. இந்தியாவில் மேனேஜ்மேண்ட் கோட்டாவில் இப்படிப்பிற்கான கட்டணம் மட்டுமே ரூ.30 முதல் 70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய கல்வி கட்டண இடைவெளி தான் பல மாணவர்களையும் இந்த நாடுகள் நோக்கி இழுக்கிறது.
அதிகளவில் பணம் புழங்குபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கிடைப்பது எளிதான காரியமல்ல. தனியார் கல்வி நிறுவனங்களில் 20,000 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது, அதோடு அங்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, கிட்டத்தட்ட மருத்துவ படிப்பை நிறைவு செய்ய 1 கோடி ரூபாய்க்கும் ஆகிறது. இந்த நாடுகளில் 2014க்குப் பிறகு, மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை 50,000லிருந்து 93,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆபத்து என்னவென்றால் அவர்கள் தாயகம் திரும்பியதும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்தியா, அமெரிக்கா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் இத்தகையோர் தேர்ச்சி பெரும் வீதம் குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் பங்களாதேஷ் மற்றும் நேபால் போன்ற இடங்களில் தேர்ச்சி வீதம் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறது. மேற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பல்வேறு எல்லைகளில் ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே நிலவும் போரில் குறைந்தது 15,000 இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்டெடுக்கும் பணியில் இந்திய அரசாங்கம் மிகவும் சுறுசுறுப்பான முயற்சி செய்து வருகிறது.
மேலும் படிக்க | சிக்கலில் இருக்கும் உக்ரைன் அதிபர் - அமெரிக்கா, இங்கிலாந்தின் ரகசிய திட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR