National News In Tamil: மலையாள சினிமா துறையில் தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் பல்வேறு நடிகைகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மலையாள திரைத்துறையில் பணிபுரியும் நடிகைகள், பெண்களுக்கு நிலவும் பாலியல் வன்கொடுமைகள், பாலின பாகுபாடுகளை களைய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்றை கேரள அரசு நியமித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேமா கமிட்டியின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதை தொடர்ந்து, அதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டது. அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும், திரைத்துறையில் பணியாற்றும் பெண்களும் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்து வருகின்றனர்.


பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து...


சமீபத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை புகாரை அளித்திருந்தார். திரைப்படத்திற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, வெளிநாட்டுக்கு அளித்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இத்தகைய அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து மலையாள திரையுலகில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 


மேலும் படிக்க | AMMA நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா... திரையுலகில் அதிர்ச்சி - அடுத்தது என்ன?


அது தற்போது தமிழ் திரையுலகம் பக்கமும் பரவியிருக்கிறது. மூத்த தென்னிந்திய நடிகையான சௌமியா தமிழ் இயக்குநர் ஒருவர் மீது பகீரங்கமான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த இயக்குநர் தனக்கு மனநலன் ரீதியாகவும், உடல்நலன் ரீதியாகவும் துன்புறுத்தியது மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் வன்கொடுமையில் ஆழ்த்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். அதிலும் குறிப்பாக பொழுதுபோக்கிற்காக தன்னுடைய பிறப்புறுப்பில் கம்பி நுழைத்து சித்ரவதைக்கு ஆளாக்கியதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார். 


18 வயதில் இருந்து...


இதுகுறித்து ஊடகம் ஒன்றில் சௌமியா கூறுகையில், தன்னை ஒரு பாலியல் அடிமையாக அந்த இயக்குநர் நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். இருப்பினும், தற்போதைக்கு இயக்குநரின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். சௌமியா இதுகுறித்து மேலும் கூறுகையில், தனது 18 வயதில் அந்த இயக்குநர் அவரின் மனைவியின் மூலம் தன்னை அணுகியதாகவும், தனது தந்தை போல் என்று கூறி தன்னுடன் குழந்தை பெற்றுள்ளக் கொள்ள விரும்பியதாக குற்றஞ்சாட்டினார். 


அந்த இயக்குநர் தன்னுடைய கல்லூரி காலத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகவும், தான் மலையாள திரையுலகிற்கு வந்த பின்னரும் அது தொடர்ந்ததாக கூறினார். 1990 காலகட்டங்களில் மூன்று வெற்றிகரமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார், அந்த படங்களில் நடிக்கும்போது இந்த சித்ரவதைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். கேரள அரசின் சிறப்பு புலனாய்வு குழுவிடம் இயக்குநரின் அடையாளத்தை தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். 


30 ஆண்டுகளாகி உள்ளது


இயக்குநருடன் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்த அவர்,"ஒரு நாள், அவரது மனைவி இல்லாத நேரத்தில், அவர் என்னை அவரது மகள் என்று அழைத்து, முத்தமிட்டார். நான் முற்றிலும் உறைந்து போனேன். நான் இதை என் நண்பர்களிடம் கூற நினைத்தேன், ஆனால் மிகவும் அசிங்கமாக இருந்தது. அந்த இயக்குநரின் மகளே அவர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அந்த இயக்குநர்  அதை முற்றிலும் மறுத்தவிட்டார். 


என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சக நடிகர் ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பிட்டுள்ளார். இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளனர். இந்த கொடுமைகளில் இருந்து மீண்டு வர எனக்கு 30 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பலரும் துணிந்து புகார் அளித்து வருகின்றனர்" என்றார். 


மேலும் படிக்க | 'பிரேமம்' பட நாயகன் நிவின் பாலி மீது பாலியல் புகார்... ஷாக்கில் திரையுலகம்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ