கேரள மாநிலத்தின் பள்ளி மற்றூம் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தாய்மொழியான மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று அங்குள்ள கல்வியாளர்கள் மாநில அரசிடம் புகார் தெரிவித்து இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் ஒரு அறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், 'அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் மலையாளம் கற்பிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அரசு வேலை வாய்ப்புகளின்போது மலையாளத்தில் விண்ணப்ப படிவத்தை நிரப்ப தெரிந்திருக்க வேண்டும். மலையாளம் தெரிந்தவர்களுக்கே அரசு வேலை வாய்ப்பும் வழங்கும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.


கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் மலையாளம் கற்றுத்தராதது தொடர்பாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு வரை மலையாளம் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி அவசர சட்டம் கொண்டு வர கடந்த புதன் திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.