முதல்வரை நாளை அறிவிக்கிறார் கார்கே... அதுவும் பெங்களூருவில்!
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இன்னும் அம்மாநிலத்தின் முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், கார்கே நாளை காலை முதல்வரை பெங்களூருவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் இன்னும் ஆலோசித்து வருவதால், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூருவில் அதுகுறித்து நாளை (மே 17) அறிவிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு கார்கே இறுதி முடிவை எடுப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"கர்நாடகா முதலமைச்சர் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் அனைத்து தலைவர்களையும் சந்தித்தார். இப்போது அவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுப்பார். அறிவிப்பு வர நாளை வரை தாமதமாகலாம், பெங்களூருவிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம்" என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரையும் டெல்லியில் சந்தித்து பேசினார். சித்தராமையா தனது மகன் யதீந்திரா, எம்எல்ஏக்கள் ஜமீர் அகமது, பைரதி சுரேஷ், மூத்த தலைவர் கேஜே ஜார்ஜ் ஆகியோருடன் கார்கேவின் இல்லத்துக்கு வந்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தும், கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா ஆகியோர் போட்டியிடுவதால், முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார், அவர் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட காங்கிரஸ் மத்திய பார்வையாளர்களின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தனது முடிவை எடுக்க உள்ளார். இருப்பினும், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை டெல்லி பயணத்தை ரத்து செய்த சிவக்குமார், இன்று டெல்லி சென்றார்.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த ஞாயிறு அன்று சிவக்குமார் கூறுகையில், கட்சியின் முடிவைப் பொருட்படுத்தாமல் துரோகம் செய்வது அல்லது மிரட்டல் விடுப்பது ஆகியவற்றை நாட மாட்டேன்" என்று தெளிவுபடுத்தினார். "கட்சி வேண்டுமானால் எனக்கு பொறுப்பை தரலாம். எங்களுடையது ஒன்றுபட்ட வீடு. எங்களின் எண் 135. இங்கு யாரையும் பிரிக்க விரும்பவில்லை, அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் தான் பொறுப்பு. நான் முதுகில் குத்தவும் மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்" என்றார்.
நாங்கள் இந்த கட்சியை கட்டியுள்ளோம், நான் அதில் ஒரு அங்கம், இதில் நான் தனியாக இல்லை" என்று அவர் பெங்களூரில் இருந்து புறப்படுவதற்கு முன் கூறினார். "நாங்கள் இந்த கட்சியை (காங்கிரஸ்) கட்டியுள்ளோம், இந்த வீட்டைக் கட்டியுள்ளோம். அதில் நானும் ஒரு அங்கம், ஒரு தாய் தன் குழந்தைக்கு எல்லாவற்றையும் கொடுப்பாள்," என்று அவர் கூறினார்.
கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் உங்கள் எதிர்பார்ப்பு குறித்து சிவக்குமார் கேட்டதற்கு, "முன்பு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நாங்கள் ஆட்சியை அமைத்தோம், ஆட்சியை இழந்தோம், கூட்டணி ஆட்சியை இழந்தோம் என்பது ஒரு முடிந்துவிட்ட அத்தியாயம். வெற்றி தோல்விக்கு யார் காரணம் என்பதை இப்போது பேசி பிரயோஜனம் இல்லை" என்றார்.
மேலும் படிக்க | டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் டிகே சிவக்குமார்? முதலமைச்சர் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ