டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் டிகே சிவக்குமார்? முதலமைச்சர் யார்?

Siddaramaiah Or DK Shivakumar?: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வது தொடர்பாக கட்சி மேலிடத்தை அவர் சந்திக்கிறார் முதல்வர் யார் ஆலோசனையில் ராகுல் காந்தி

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2023, 02:53 PM IST
  • முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இந்நாள் முதல்வர் ஆவார?
  • மாநில காங்கிரஸின் தலைவர் டி கே சிவகுமாருக்கு பதவி உயருமா?
  • போட்டியில் இணையும் மல்லிகார்ஜுன கார்கே
டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்கும் டிகே சிவக்குமார்? முதலமைச்சர் யார்? title=

புதுடெல்லி: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வது தொடர்பாக கட்சி மேலிடத்தை அவர் சந்திக்கிறார். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இருக்கிறது காங்கிரஸ்.

முதல்வர் யார் என்னும் கேள்வி எழுந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸின் தலைவர் டி கே சிவகுமாருக்கும் போட்டிகளை வருகிறது இது குறித்து நேற்று முன்தினம் டெல்லி தலைமை அமைத்த இருவர் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தி அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று டிகே சிவகுமார் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தார்.

இன்றும் பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் டெல்லியில் இருந்து வந்திருக்கும் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுனாவின் இல்லத்தில் அடுத்த முதல்வர் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்... நான் சிறுபிள்ளை இல்லை - டிகே சிவகுமார் கொடுத்த ட்விஸ்ட்!

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்று இருக்கிறார். ஏற்கனவே சித்தராமையா டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று டி கே சிவக்குமாரின் சகோதரர் டெல்லி செல்கின்ற நிலையில் இன்று டி கே சிவகுமார் டெல்லி சென்றிருக்கிறார்.

இன்று இரவுக்குள் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பது தெரியவரும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது பல அரசியல் நிபுணர்களின் கருத்துப்படி, சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவரும் போட்டியில் இருந்து விலகி, மல்லிகார்ஜுன கார்கே முதலமைச்சராக அறிவிக்கப்படலாம். இதன் பின்னணி என்ன?

மல்லிகார்ஜுன கார்கே
முதலமைச்சராக வர முடியவில்லையே என்படு மல்லிகார்ஜுன கார்கேவின் நீண்டகால ஏக்கம். கர்நாடக முதல்வர் பதவி அவரிடமிருந்து மூன்று முறை கை நழுவிப்போனது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை ஏற்பீர்களா என்று தற்போதைய தேர்தலுக்கு முன் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கேட்கப்பட்டது.

நீலம் சஞ்சீவ ரெட்டியை போல தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று ஏப்ரல் மாதம் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவாகக் கூறியிருந்தார்.

ஆனால், ஒரு செய்தியாளர் சந்திப்பில் கார்கேவுக்காக முதல்வர் நாற்காலியை தியாகம் செய்வதாக டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியமானவர் இவர் தான்... அடுத்த அசைன்மென்ட் என்ன?

2020 முதல் கர்நாடக மாநில தலைவராக இருக்கும் டிகே சிவக்குமார், கர்நாடக மாநிலத்தில் மிக மோசமான நிலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி தற்போது அமோக வெற்றி பெறச் செய்துள்ளார். 

மாநிலத்தில் வொக்கலிகா சமூகத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் அவர், 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது, கனகபுரா தொகுதியில் எட்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டில் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் டெல்லியின் திகார் சிறையில் அவர் சுமார் இரண்டு மாதங்கள் கழித்தவர் என்பது அவருக்கு இருக்கும் ஒரு கருப்புப் புள்ளி.

மேலும் படிக்க | தாமதமாகும் காங்கிரஸ் சட்ட மன்ற கட்சிக் கூட்டம்... கர்நாடகாவில் பரபரப்பு!

காங்கிரஸ் மேலிடத்துடன் நெருக்கமாக இருக்கும் டிகே சிவக்குமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் செல்வாக்குக்கு முன் சிவக்குமார் எடுபடுவாரா என்பதை பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல, சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதைவிட, கார்கேவுக்கு கொடுத்தால் என்ன என்பது டிகே சிவக்குமாரின் எண்ணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1983ஆம் ஆண்டு முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்த ராமையா, 1994இல் ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது கர்நாடகாவின் துணை முதல்வரானார். எச்.டி.தேவே கெளடாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகி 2008இல் காங்கிரஸில் இணைந்தார்.

2013 முதல் 2018 வரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். இதுவரை 12 தேர்தல்களில் போட்டியிட்டு 9 முறை வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | நீயா-நானா சண்டை போதும் சிவகுமார் மற்றும் சித்தராமையா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News