Karnataka News in Tamil: கர்நாடக மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் அடுத்த கர்நாடக முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இன்று (மே 16, செவ்வாய்க்கிழமை) நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். கர்நாடக முதல்வர் தேர்வுக்கான ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் ராகுல் காந்தி கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனை கூட்ட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக விவகாரங்களுக்கு பொறுப்பான பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் டெல்லி வந்துள்ளார். அதேசமயம் முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று முதல் டெல்லியில் இருக்கிறார். முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். முதல்வர் பதவிக்கான போட்டியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் உள்ளனர்.
அடுத்த முதல்வர் யார்? ராகுல் காந்தி ஆலோசனை:
சுமார் ஒன்றரை மணி நேரம் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கர்நாடக முதல்வர் நியமனம் குறித்து ஆலோசனை செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் இரண்டு விதமான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது இரண்டரை வருஷத்துக்கு ஒருவர் முதல்வர் என்ற திட்டமும், ஒருவருக்கு முதல்வர் பதவி, மற்றொருவருக்கு ஒரு துணை முதல்வர் பதவி என்ற இருவிதமான ஃபார்முலா குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எந்த ஃபார்முலாவை செயல்படுத்தப்போகிறார்கள் என்பது குறித்து இறுதிமுடிவு அறிவிப்பு வந்த பிறகு தான் தெரியவரும்.
#WATCH | Congress leader Rahul Gandhi leaves from the residence of party president Mallikarjun Kharge.#KarnatakaCMPost https://t.co/Ea3dtsnlUk pic.twitter.com/5js8RpEDhh
— ANI (@ANI) May 16, 2023
மேலும் படிக்க: கர்நாடக அரியணைப் போரில் பின்னேறுவது யார்? மகுடம் யாருக்கு?
டெல்லியில் முகாமிட்டு இருக்கும் சித்தராமையா:
முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று முதல் டெல்லியில் இருக்கிறார். இன்று, கட்சித் தலைவர் கார்கே மற்றும் சோனியா காந்தி சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நான் பொறுப்பானவன். கட்சியை ஏமாற்றவோ, மிரட்டவோ மாட்டேன் -டி.கே. சிவக்குமார்
மறுபுறம், முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளரான டி.கே. சிவக்குமார் டெல்லி செல்லும் முன் கூறுகையில், "கட்சியை ஏமாற்றவோ, கட்சியை மிரட்டி பதவியை பெறவோ மாட்டேன். லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதே எங்களின் அடுத்த இலக்கு. எங்கள் கட்சி ஒன்றுபட்டுள்ளது. யாரையும் பிரிக்க விரும்பவில்லை. நான் பொறுப்பானவன். கட்சியை ஏமாற்றவோ, மிரட்டவோ மாட்டேன். இன்று நான் இந்த இடத்திற்கு வர காங்கிரஸ் தான் காரணம். இந்தக் கட்சியை (காங்கிரஸ்) உருவாக்கினோம். இந்த வீட்டை உருவாக்கினோம். அதில் நானும் ஒரு அங்கம். ஒரு தாய் தன் குழந்தைக்கு அனைத்துயும் கொடுப்பாள்" என்று கூறினார்.
#WATCH | Delhi | "If any channel is reporting that I am resigning from the post, I will file a defamation case against them...Some of them are reporting that I will resign...My mother is my party, I built this party. My high command, my MLA, my party are there - 135," says… pic.twitter.com/egykzC1j4t
— ANI (@ANI) May 16, 2023
கர்நாடக முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அதிகாரம்:
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைக் கூட்டத்தில், கர்நாடக முதல்வரின் பெயரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கேவுக்கு அதிகாரம் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதாவை தோற்கடித்து அமோக வெற்றியைப் பதிவு செய்த காங்கிரஸ், முதல்வர் தேர்வு குறித்து ஆலோசித்து வருகிறது.
கர்நாடகவில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ்:
கடந்த மே 10 ஆம் தேதி 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றிப் பெற்றது, அதே நேரத்தில் பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதேபோல முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 19 இடங்களையும் கைப்பற்றியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ