INDIA Alliance Meeting News: அடுத்த ஆண்டு 2024ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வெற்றி பயணத்தை நிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் முக்கியமான கூட்டம் புதன்கிழமை (டிசம்பர் 06) நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணியின் முதல் கூட்டம் இதுவாகும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் (All India Trinamool Congress) தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் (Akhilesh Yadav) மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் (Nitish Kumar) ஆகியோரும் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நடத்தையால், குறிப்பாக மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தலில் தனித்து காங்கிரஸ் போட்டியிட்டது அகிலேஷ் யாதவை விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமே இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று டெல்லி வந்தடைந்தார். இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.


இந்தியா கூட்டணிக் கூட்டத்திற்கு அழைப்பு 


ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகள் கூட்டணிக் கூட்டத்திற்கு டிசம்பர் 6 ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 28 கட்சிகளையும் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக


மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ்


இந்த இந்தியா (Indian National Developmental Inclusive Alliance) கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி ஏற்கனவே மறுத்துவிட்டார். அதே நேரத்தில் அகிலேஷ் யாதவும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவருக்குப் பதிலாக எஸ்பி கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் கலந்துக்கொள்கிறார். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு பதிலாக ஜேடியுவில் இருந்து லல்லன் சிங் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோர் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள் என அறிவிப்பு. 


ஏன் இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை?


இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த மம்தா பானர்ஜி (Mamata Banerjee) கூறுகையில், "இந்தியா’ கூட்டணிக் கூட்டம் குறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறினார். இந்த சந்திப்பு குறித்து யாரும் என்னிடம் கூறவில்லை அல்லது இது தொடர்பாக எனக்கு அழைப்பு மூலம் தெரிவிக்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் எனக்கு 6 முதல் 7 நாட்கள் தொடர்ந்து செயல்திட்டம் உள்ளது. திடீர்ரென அவர்கள் என்னை ஒரு கூட்டத்திற்கு அழைத்தால், நான் எப்படி எனது திட்டங்களை மாற்ற முடியும்" எனக் கூறியுள்ளார். 



சமாஜ்வாதி கட்சியால் காங்கிரசுக்கு தோல்வி


அதற்குக் காரணம் இந்தியக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்தாலும், மத்தியப் பிரதேசத்தில்  சமாஜ்வாதி கட்சி தனித் தேர்தலில் போட்டியிட்டது. அக்கட்சி சுமார் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு பல இடங்களில் சமாஜ்வாதி கட்சியால் தோல்வி ஏற்பட்டு உள்ளது. அந்த இடங்களில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு இருந்தால், அந்த தொகுதிகள் காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணிக்கு கிடைத்திருக்கும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டார். 


மேலும் படிக்க - காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதிதான் காரணமா? - சனாதான சர்ச்சையும் வடஇந்திய பின்னடைவும்!


லோக்சபா தேர்தலில் ஒன்றாக இருக்கலாமா வேண்டாமா?


ஒருவேளை ம.பி. சட்டசபை தேர்தல் இந்திய கூட்டணியின் கீழ் நடந்திருந்தால், முடிவுகள் மாறியிருக்கலாம். இது குறித்து அதிருப்தி தெரிவித்த அகிலேஷ், லோக்சபா தேர்தலில் ஒன்றாக இருக்கலாமா வேண்டாமா என்பதை பரிசீலிப்பதாக கூறியிருந்தார். 


காங்கிரஸ் மீது சிவசேனா அதிருப்தி


மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ் 5-10 இடங்கள் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி இருந்தார். இதே கருத்தை சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவுத் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 04) கூறினார். ஒரு சில கட்சிகள் சில பகுதிகளிலும், சில கட்சிகள் வேறு பகுதிகளிலும் வலுவாக இருந்தால், கூட்டணிக் கொள்கையை பின்பற்றி அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அகிலேஷ் யாதவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்யும் உமர் அப்துல்லா


தேசிய மாநாட்டுத் தலைவர் உமர் அப்துல்லாவும், மூன்று மாநிலங்களில் தேர்தலில் தோல்வியடைந்ததால், ​​மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா கூட்டணியை காங்கிரஸ் நினைவு கூர்ந்ததாக கிண்டலாகக் கூறியுள்ளார். 


இந்திய கூட்டணியின் முகமாக நிதிஷ்குமாரை உருவாக்க வேண்டும்


மறுபுறம், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு, இந்திய கூட்டணியின் முகமாக நிதிஷ்குமாரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜேடியு எழுப்பியுள்ளது. ஜேடியு தலைவர் நிகில் மண்டல் கூறுகையில், ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி இனி நிதிஷ் குமாரை பின்பற்ற வேண்டும். 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் மும்முரமாக இருந்ததினால் இந்திய கூட்டணியில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது காங்கிரஸும் தேர்தலில் போட்டியிட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியக் கூட்டணியின் சிற்பி நிதிஷ் குமார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவரால் மட்டுமே இந்திய கூட்டணியை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றார்.


ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் காங்கிரசை குறிவைத்து மட்டுமின்றி, இந்த மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்காததால் ஏற்படும் விளைவுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க - I.N.D.I.A கூட்டணியில் பலத்தை நிரூபிக்க தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் காங்கிரஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ