மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி ஆஷிம் இறந்தார். அவரது மரணத்திற்கு கொரோனா தொற்றே காரணம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவால் பாதிக்கப்பட்ட  மமதா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் இறந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்தியாவில் நேற்று மட்டும் 3,26,089 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 353,299 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனால் குணமானவர்களின் எண்ணிக்கை 20,432,898 ஆக உயர்ந்துள்ளது.  


Also Read | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 326,098 பேருக்கு கொரோனா உறுதி 


தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து அரசு முகமைகள் தகவல்களை தொகுத்து வழங்கிவருகின்றன.
 
இந்தியாவில் கோவிட் -19 நோய் நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமையன்று கவலை தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் மற்றும் கொரோனா மரணங்கள் ஏற்படுவது கவலைகளை அதிகரிக்கச் செய்கிறது.


Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR