DMDK to CM Relief fund: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்

 கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2021, 08:20 AM IST
  • முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்
  • தனது பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் கொடுத்தார்
  • கொரோனாவில் இருந்து பாதுகாக்க முககவசம் அணிவோம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை விஜயகாந்த் மேற்கொண்டார்
DMDK to CM Relief fund: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறார் விஜயகாந்த்

சென்னை: கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தே.மு.தி.க. (DMDK) கட்சித் தலைவர் விஜயகாந்த் ரூ.10 லட்சம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம் 

கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தே.மு.தி.க.வின் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கி உள்ளோம்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். மேலும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.

இந்நிலையில், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Also Read | கொரோனா தொற்று பாதிப்பால் கில்லி பட நடிகர் மரணம்!

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு கொரோனாவில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முககவசம் அணிவோம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தையும்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த தமிழக மக்களும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவருமே, அவரவர்கள் முகத்தில் முககவசம் (Mask) அணிந்து மொபைல் போனில் செல்ஃபி (Selfi) படம் எடுத்து முகப்பு புகைப்படமாக (Dp) பதிவிட்டும், அதை சமூக வலைதளங்களில் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter) போன்றவற்றில் பதிவிட்டு முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்களையும், தேமுதிக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கடந்த ஆண்டு விஜயகாந்த் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

Also Read | சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!

நன்கொடைகளுக்கு 100% வருமான வரி அளிக்கப்படும். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள், நிதி நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவலாம்.

இது தொடர்பாக நிதியுதவி அளிப்பவர்களின் வசதிக்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு விவரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் கோரிக்கையை பலரும் ஏற்று வங்கிக் கணக்கில் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா சிவக்குமாரின் குடும்பத்தின் சார்பில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது.  

Also Read | ஸ்ரீ ராமஜெயம் என்று மனதால் ஜெபிப்பதைவிட, 108 முறை எழுதுவது அதிக பலன் தருமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News