காட்டு யானையை  துப்பாக்கியால் சுட்டு கொன்ற கர்நாடக மாநில விவசாயியை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா கொர்கிஹள்ளி கிராமம் அரஹள்ளி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வந்தன.


காட்டு யானைகள் தாக்குதலில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைக் கூட்டம், பயிர்களையும் நாசப்படுத்தி வருகின்றன.


இந்த நிலையில் கோர்கிஹள்ளி கிராமத்தை சேர்ந்த சையத் சத்தார் என்பவரது தோட்டத்தில் நேற்று காலை ஒரு காட்டு யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்து கிடந்தது.



இதை பார்த்த கிராம மக்கள் அரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


தகவல் தெரிந்து விரைந்து வந்த வனத்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.


தீவிர விசாரணையை அடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.


மேலும் படிக்க | கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை


கொல்லப்பட்ட யானைக்கு 15 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர் அட்டகாசத்தில் காட்டு யானைகள் ஈடுபட்டு வந்ததால், மர்மநபர்கள் ஆத்திரத்தில் காட்டு யானையை சுட்டுக்கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.


அதன்பேரில் அரஹள்ளி வனத்துறையினரும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தோட்டத்தின் உரிமையாளர் சையத் சித்தார், யானையை துப்பாக்கியால் சூட்டு கொன்றது தெரியவந்தது.


இதையடுத்து, போலீசார் சையத் சித்தாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்: அதிகாரம் செய்யும் காட்டு ராஜா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR