யானையை பார்ப்பது என்பதே வியப்பு தான். அதிலும் தந்தம் கொண்ட யானை உயரமாக ராஜ நடையிட்டு வந்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்து பாருங்கள். உடலை சிலிர்க்க வைக்கும் அப்படியொரு காட்சியை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. நேரில் பார்க்கவில்லை என்றாலும் வீடியோவிலாவது பார்த்து ரசித்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டிலோ அல்லது வட மாநிலங்களிலோ அல்ல. நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் அப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
வனப்பகுதிக்குள் செல்லும் சாலையில் மக்கள் வழக்கம்போல் பயணித்துள்ளனர். அப்போது, திடீரென வனப்பகுதிக்குள் வெளியேறிய, மிக உயரமான ராட்சத தந்தங்களைக் கொண்ட யானை நடு ரோட்டில் முகாமிட்டது. என்னோட ஏரியாக்குள்ள யாருடா வர்றது என்பதை கேட்பதுபோல், அந்த சாலையை விட்டு இறங்காமல் அங்கும் இங்கும் உலாவுகிறது. அந்த நேரத்தில் அந்த சாலையில் பயணித்த மக்கள் யானையை பார்த்தவுடன் மிரட்சியுடன் சாலையிலேயே நிற்கின்றனர்.
Tusker on road cutting thru #Karnataka forests. Majestic@NewIndianXpress @XpressBengaluru @KannadaPrabha @Cloudnirad @Amitsen_TNIE @KumarPushkarifs @mahesh_ifs @ParveenKaswan @ifs_yedukondalu @aranya_kfd @Bandipur_TR @nagaraholetr @jungle_lodges @KarnatakaWorld @wildmysuru pic.twitter.com/ZBMbmDfNZJ
— Bosky Khanna (@BoskyKhanna) May 10, 2022
இதனை சில வீடியோவாகவும் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். பலரும் யானையை பார்த்து ஆப்பிரிக்க யானைக்கு நிகராக இருப்பதாக கமெண்ட் அடித்துள்ளனர். உண்மையிலேயே அந்த யானை பார்ப்பதற்கு ஆப்பிரிக்க யானைபோல் தான் இருக்கிறது. மிக உயரமாக இருப்பதால், பார்த்தவுடனே பயத்தை வரவழைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR