கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை

மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை வாகனத்தை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 26, 2022, 12:24 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்
  • சுற்றுலா வாகனத்தை காட்டுயானை ஒன்று வழிமறித்தது
  • யானைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன
கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை title=

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மேலும் படிக்க | மணமகனுக்கு வந்த சோதனை, மேடையில் அவிழ்ந்துவிழுந்த பேண்ட்: வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் யானைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. 

தற்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி என்ற இரண்டு மலைப்பாதைகள் உள்ளன. இந்த இரு சாலைகளும் அடர்ந்த வனத்தின் நடுவே உள்ளதால் இந்த சாலையின் ஓரத்தில் வன உயிரினங்கள் நடமாட்டம் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை என்ற இடத்தில் சுற்றுலா வாகனத்தை காட்டுயானை ஒன்று வழிமறித்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று குஞ்சப்பனை அருகே சென்ற போது சாலையின் ஓரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நின்று கொண்டு இருந்துள்ளது. 

அந்த யானை சாலையின் ஓரத்தில் இருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த யானையை கடந்து செல்ல கார் முயன்ற போது வழிமறித்த யானை முன்னேறி செல்ல விடவில்லை மாறாக துரத்தவும் செய்தது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரினை பின் நோக்கி இயக்கி தப்பினர். இதனையடுத்து சுமார் அரை மணி நேரம் காத்திருந்து யானை அங்கிருந்து நகர்ந்தவுடன் மீண்டும் காரில் வந்தவர்கள் புறபட்டு சென்றனர்.

மேலும் படிக்க | கிரிக்கெட் பேட்டால் கணவனை வெளுத்து வாங்கிய மனைவி; அதிர்ச்சி தரும் CCTV காட்சிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News