ரயில் வரும் தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணியை நிலைய ஊழியர் ஒருவர் நூலிழையில் காப்பாற்றிய வீடியோ விரலாக பரவி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து வைரளாகி வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயில் முன்பு தவறி விழுந்த பயணியை நிலைய ஊழியர் ஒருவர் நூலிழையில் காப்பாற்றிய வீடியோ விரலாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ரயில் வரும் சமயம் தண்டவாளத்தில் விழுந்தவரை ரயில் நிலைய ஊழியர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. 


ஓக்லாண்ட் ரயில் நிலையத்தில் ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் விழுந்தவரை அருகில் நின்ற ரயில் நிலைய ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில் தோள்பட்டையை பிடித்து மேலே இழுத்து காப்பாற்றுகிறார். இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. ரயில் நிலைய ஊழியரின் சமயோசித நடவடிக்கையை அங்கு குழுமியிருந்த அனைவரும் பாராட்டிய நிலையில் ரயில் மோதுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பித்தவர், தன்னைக் காப்பாற்றியவரை கட்டியணைந்து நன்றி தெரிவித்தார்.



BART-லிருந்து CNN-க்கு ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, அந்த நபர் தடங்களில் விழுந்தபோது போதையில் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 99.9 K பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் நெட்டிசன்கள் தொழிலாளியின் விரைவான பதிலுக்கும் துணிச்சலுக்கும் கைதட்டுவதை நிறுத்த முடியாது. அவர்கள் ஜானைப் புகழ்ந்து அவரை "இன்றைய ஹீரோ" என்றும் "பாதுகாவலர் தேவதை" என்றும் அழைத்தனர். மற்றொருவர் அவரை, "மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள், அது மிகவும் நல்லது." என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.