சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான வழக்கில், தேநீர் தயாரிக்க மறுத்த மனைவிக்கு முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் முழு அடைப்பு காரணமாக வீட்டில் முடங்கியிருந்த ஒரு கணவர் தனது மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார், ஆனால் அவரது மனைவி சூழ்நிலை காரணமாக மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர், முத்தலாக் கூறி குழந்தையுடன் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த வழக்கு உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் பெயர் ஹாஜி அப்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


READ தொலைபேசியில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது வழக்கு பதிவு!


தேநீர் கோரிக்கையை மனைவி மறுத்து, கணவருக்கு தேநீர் கொடுக்காதபோது, ​​கணவருக்கு கோபம் வந்தது. அவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்து, அப்பாவி குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பராபங்கியில் உள்ள ராம்நகர் காவல் நிலைய பகுதியின் சுந்தியமாவ் கிராமத்தில் பதிவான இந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்மனி 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜி அப்சலை மணந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு வயது மகன் ஒருவர் உள்ளார் என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.


"நாங்கள் ஒன்றாக 3 ஆண்டுகள் முடித்துவிட்டோம், எங்களுக்கும் ஒரு மகன் இருக்கிறார். என் கணவர் என்னிடமிருந்து தேநீர் கேட்டபோது, ​​நான் என் மகனுக்கு உணவளித்துக்கொண்டு இருந்தேன். இதன் காரணமாக என்னால் தேநீர் தயாரிக்க முடியவில்லை, பின்னர் அவர் என்னை அடித்து முத்தலாக் கொடுத்தார்." என பதாக்கப்பட்ட பெண் தெரிவிக்கின்றார்.


READ குட்டை பாவாடை அணியாததால் மனைவியை விவாகரத்து செய்த கணவர்!


இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்துள்ளனர். முழு அடைப்பு காரணமாக லக்னோவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியாத மனைவி, அதே கிராமத்தில் உள்ள அவரது உறவினருடன் தங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.