பிரதமர் மோடியின் மூன்று ஆண்டுகால வெற்றியை பாஜக கட்சி கொண்டாடி வருகிறது. குஜராத் மாநிலம் அமரெலியில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது வந்தே மாதரம் என கோஷம் எழுப்பிய வாலிபர் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மீது வளையல்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர். 


விசாரணையில் வாலிபர் 20 வயது கேதான் காஸ்வாலா என தெரியவந்து உள்ளது, அவர் அமரெலி மாவட்டம் மோதா பன்டாரியா கிராமத்தை சேர்ந்தவர்.


முன்னதாக கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசார் 25 பேரை கைது செய்தனர். 


உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரேஷ் தனானி பேசுகையில், மாநிலம் முழுவதும் விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்காக காஸ்வாலா வளையல்களை வீசினார் என்றார். ஆனால் போலீஸ் அதனை மறுத்துவிட்டது.


கேதான் காஸ்வாலா எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவர் கிடையாது, வளையல்களை வீசிய போது வந்தே மாதரம் என்ற கோஷத்தை மட்டுமே எழுப்பினார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. 


ஸ்மிருதி இரானி பேசுகையில்:-


அவர் வளையல்களை வீசட்டும், அதனை அவருடைய மனைவிக்கு பரிசாக வழங்குவேன் என பேசினார்.