எதிரியை சமாளிக்க தாயை டிராக்டர் முன் தள்ளிய மகன்!!
நில பிரச்சனையில் எதிரியை தடுப்பதற்கு வேறு வழி தெரியாமல் தாயை டிராக்டர் முன் தள்ளிய மகன்!!
நில பிரச்சனையில் எதிரியை தடுப்பதற்கு வேறு வழி தெரியாமல் தாயை டிராக்டர் முன் தள்ளிய மகன்!!
மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டம் முன்ஷிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த மகாதேவ் லட்சுமண் ராவத் என்பவருக்கும், கைலாஸ் தால்வி என்பவருக்குமிடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது. இது குறித்து இரு தரப்பினருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தாசில்தாரிடம் எடுத்து சென்றுள்ளார் ராவத். இதற்கான தீர்ப்பு ராவத்துக்கு சாதகமாக வந்தது.
இதையடுத்து, ராவத் கடந்த 21-ம் தேதி அந்த நிலத்தில் பயிரிடுவதற்காக நிலத்தை உழுவதற்கு டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். இதை கண்ட தால்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்து பயிரிடக்கூடாது என தடுத்து நிறுத்தினர். இவர்களை பொருட்படுத்தாமல் ராவத் டிராக்டரை தொடர்ந்து முன்னேறியதால் கடுப்பான தால்வி, தன் தாயாரை டிராக்டரின் முன் தள்ளிவிட்டுள்ளார். இதனால் பயந்து போன டிரைவர் டிராக்டரை சற்று பின்னோக்கி நகர்த்துகிறார்.
அதன்பிறகும், தள்ளாடிய நிலையில் இருக்கும் தாயாரை மீண்டும் டிராக்டரின் முன்னால் தூக்கி போடுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பலரும் ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.