பிரபல மலையாள இயக்குநர் சனல் குமார் சசீதரன் சமீபத்தில் தனது முக நூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து நடிகை மஞ்சு வாரியரிடத்தில் அதிகாரிகள் வாக்கு மூலம் சேகரித்த நிலையில் தற்போது அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குடிச்சா இதெல்லாம் சகஜம் தான் - ஆந்திர பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!


அவர் மட்டும் இன்றி அந்த வழக்கில் தொடர்புடைய அல்லது அந்த வழக்கு குறித்து தகவல் அறிந்த பலருக்கும் ஆபத்து இருப்பதாகவும் கூறியிருந்தார். மஞ்சுவாரியரின் அனுமதி இன்றி அவர் வெளியிட்ட இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுவாரியர், சனல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளித்திருந்தார்.


இதை அடித்து அவரை பிடித்து விசாரிக்க கேரள மாநில போலீஸார் முடிவெடுத்தனர். ஆனால், சனல் குமார் திடீரென தலைமறைவானதால் அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் திடீரென பாராசால என்ற இடத்திற்கு தனது சகோதரியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.அங்கு வைத்து சிலர் அவரை போலீஸார் எனக்கூறி விசாரணைக்கு அழைப்பு விடுத்த நிலையில் உயிர் பயத்தில் இருந்த சனல் குமா் உடனடியாக ஃபேஸ் புக் லைவில் வந்து தன்னை யாரோ கடத்த முயற்சிப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து எனவும் கூறி இருந்தார்.


அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் காவல்துறைக்கும், நீதிமன்ற உத்தரவிற்கும் நான் கட்டுப்படுகிறேன் எனக்கூறி இயக்குனர் சனல் குமார் தற்போது போலீஸில் சரணடைந்துள்ளார்.   


மேலும் படிக்க | மத மாற்ற விவகாரத்தில் அரசு ஏன் விதிமுறைகளை வகுக்கக்கூடாது? -உயர் நீதிமன்றம் கேள்வி  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR