குடிச்சா இதெல்லாம் சகஜம் தான் - ஆந்திர பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

மது அருந்தினால் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் என்ற ஆந்திர பெண் அமைச்சரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 5, 2022, 11:08 AM IST
  • மது போதையில் இருக்கும்போது சில விஷயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும்
  • இதற்கும், போலீசார் பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை
குடிச்சா இதெல்லாம் சகஜம் தான் - ஆந்திர பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! title=

கடந்த மே 1 ஆம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபல்லே நகர் ரயில் நிலையத்தில் கணவர், மனைவி மற்றும் 3 குழந்தைகள் என குடும்பத்துடன் ரயிலுக்காக காத்திருந்தனர்.

அந்த மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவரிடம் அவ்வழியாக வந்த 3 பேர் பணம் கேட்டு மிரட்டி தகராறு செய்துள்ளனர்.

தகராறு செய்த மூன்று பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது கணவரிடம் பணம் இல்லை எனக்கூறியதால் அந்த போதை ஆசாமிகள் அவரை தாக்க தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து கணவரை காப்பாற்றும் நோக்கில் கர்ப்பிணி பெண் நடுவில் வந்து போதை ஆசாமிகளிடம் தனது கணவரை விட்டு விடும்படி கேட்டுள்ளார்.

ஆனால் போதையில் இருந்த அவர்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் அப்பெண்ணை இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மனைவியை காப்பாற்றுவதற்கு அக் கணவர் போலீஸாரை தேடி ஓடியுள்ளார். ஆனால் துர்ரதிர்ஷ்ட வசமாக கண்ணுக்கெட்டும் தூரத்தில் போலீஸார் தென்படவில்லை.

மேலும் படிக்க | தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின்சார வாரியம்

இந்த சம்பவம் நிகழ்ந்து முடிந்து, போதை ஆசாமிகள் தப்பி ஓடிய பிறகே போலீஸாரை சம்பவ இடத்திற்கு கணவர் அழைத்து வந்துள்ளார்.

இந்த அசம்பாவிதத்தை தடுக்க முடியாத சூழல், ரயில்வே பாதுகாப்பு பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாகவே நிகழ்ந்தது என மக்கள் பரவலாக குற்றம் சுமத்தி வந்தனர்.

மேலும் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதின் பேரில் சந்தேகமுடைய மூன்று நபர்களையும் ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையத்தில் நடந்த இரண்டாவது பாலியல் வன்கொடுமைச் சம்பவம் இதுவாகும். 

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி, பால்நாடு மாவட்டத்தில் உள்ள குராசாலா ரயில் நிலையத்தில் தனது குழந்தையுடன் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தனதி வனிதா இந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கும் அரசு ரயில்வே காவல்துறை பணியாளர்கள் பற்றாக்குறையுக்கும்  தொடர்பு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தப் பெண்ணைத் தாக்கும் நோக்கத்துடன் ரயில் நிலையத்திற்கு வரவில்லை. அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் தகராறு செய்த போது அந்தப் பெண் குறுக்கிட்ட போது இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மது போதையில் இருக்கும்போது சில விஷயங்கள் எதிர்பாராத விதமாக நடக்கும். இதற்கும், போலீசார்  பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை " என அவர் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படுக்க | வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News