கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுபில் 22 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் அரசு தனது பெரும்பான்மை நிருப்பித்தது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள மனோகர் பரீக்கர் அரசு மீது கோவா சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற உள்ளது.


கோவாவில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க முன் வந்தால் ஆதரவு அளிப்பதாக மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சைகள் தெரிவித்தனர்.


கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் 14-ம் தேதி 4-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டன. 


ஆனால் கோவா முதல்வராக மனோகர் பரீக்கர் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால், பரீக்கர் பதவியேற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. பதவியேற்ற பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக வுக்கு உத்தரவிட்டது. 


40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் எந்தக் கட்சிக்கும் பெரும் பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 13, காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றன. சிறிய கட்சிகள், சுயேச்சைகள் 10 தொகுதிகளில் வென்றன. இவர் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. 


அப்போது  22 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு ஆதரவாகவும், எதிராக 16 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் அவையை புறக்கணித்தார். இதனால், அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.