பிரதமர் மோடி இல்லத்தில் முக்கிய ஆலோசனை; மத்திய அமைச்சரவையில் மாற்றமா?
மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று தலைவர்களுக்கிடையில், பிரதமர் மோடியின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்களின் பணிகள், ஒவ்வொன்றாக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று நம்பப்படுகிறது. இதனுடன், உத்திர பிரதேச அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படலாம்.
இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களின் பணிகளையும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பிரதமர் மோடி ஏற்கனவே மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் பணிகளை மதிப்பீடு செய்துள்ளார். தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர், கஜேந்திர சிங் சேகாவத், மகேந்திர நாத் பாண்டே, ஹர்தீப் பூரி ஆகியோருடன் அவர் அவர்களது அமைச்சகங்களின் பணிகளை சனிக்கிழமை மதிப்பாய்வு செய்வார் எனவும் கூறப்படுகிறது.
ALSO READ | கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயார்: யோகா குரு பாபா ராம்தேவ்
அடுத்த ஆண்டு உத்திர பிரதேசம் உட்பட நாட்டின் 6 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது கொரோனா தொற்று நோய் இரண்டாவது அலையை சரியாக கையாளவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், நிலைமையைக் கையாள மோடி தலைமையிலான அரசு ஆலோசனைகளை தொடங்கியுள்ளது.
பிரதமரின் மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, சில அமைச்சர்கள் பொறுப்புக்களை இழக்கக் கூடும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், பல புதிய நபர்களுக்கு அமைச்சர்களாக ஆக வாய்ப்பு வழங்கப்படலாம். இதனுடன், நாட்டில் நிவாரண பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் பல புதிய அறிவிப்புகளையும் வழங்கலாம் என கூறப்படுகிறது.
ALSO READ | உ.பி. அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் 90 நிமிடம் அமித் சாவை சந்தித்து பேசிய யோகி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR