உ.பி. அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் 90 நிமிடம் அமித் சாவை சந்தித்து பேசிய யோகி

உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? இல்லையா? என்பது தான் சர்ச்சையாக உள்ளது. 

Written by - ZEE Bureau | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 10, 2021, 09:24 PM IST
உ.பி. அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் 90 நிமிடம் அமித் சாவை சந்தித்து பேசிய யோகி

புது டெல்லி: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தில் இன்று பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Yogi Adityanath meet Amit Shah) சந்தித்து 90 நிமிடம் இருவரும் பேசி உள்ளனர். யோகி ஆதித்யநாத் நாளை பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசவுள்ளார். கடந்த சில நாட்களாவே உத்தரபிரதேச அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிகிறது. 

காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், இளைஞர் தலைவருமான ஜிதின் பிரசாதா (Jitin Prasada) உ.பி. மாநில பாஜகவில் இணைந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும் இது பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு (Yogi Adityanath) எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? இல்லையா? என்பது தான் சர்ச்சையாக உள்ளது. இதற்கிடையில் ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்து இருப்பது, யோகி ஆதரவாளர்களுக்கு மத்தியில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.

ALSO READ |  கங்கையில் மிதக்கும் கோவிட் நோயாளிகளின் சடலங்கள்: கரை ஒதுங்கிய உடல்களால் பீதி!

உ.பி. மாநில பாஜக கட்சியின் சொந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பகிரங்கமாக மேலிடத்தில் யோகி பற்றி புகார் அளித்து வருகின்றனர். அதே நேரத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறந்தநாளில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தாதது விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தது. 

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் (UP Government) கோவிட் தொற்றுநோயைக் கையாண்டது குறித்து பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் கோவமாக இருக்கிறார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் மாநிலத்தில் அரசியல் மாற்றம் செய்ய பரிசீலிக்கப்படுகிறது எனவும் தகவல் வெளியானதை அடுத்து உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது உண்மை இல்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உடனடியாக விளக்கம் அளித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்தை நீக்குவதை பாஜக வட்டாரங்கள் நிராகரித்தன. பிரதமர் மோடியுடன் நெருக்கமாக கருதப்படும் முன்னாள் அதிகாரத்துவ ஏ.கே.ஷர்மாவுக்கு உத்தரபிரதேச அரசாங்கத்தில் முக்கிய பங்கு வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாதம் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும், சாதி மற்றும் பிராந்திய சமன்பாடுகளை மனதில் கொண்டு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்: நுரையீரல் நீக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி

இந்த அரசியல் பரபரப்புக்கு இடையில், பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை முதல்வர் யோகி சந்தித்து பேசுவது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது கோவிட் அலை தொடர்பாக எதிர்க்கட்சி உ.பி. அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. கங்கை நதியில் மிதந்து வந்த இறந்த உடல்களின் படங்கள் சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. ஆனால் ஊடகங்கள் நிலைமையை தவறாக சித்தரிப்பதாக உ.பி. அரசாங்கம் குற்றம் சாட்டியதோடு, யோகி ஆதித்யநாத் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் விளக்கம் அளித்தனர். 

COVID-19 இன் இரண்டாவது அலையில் உ.பி. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாகும்.

ALSO READ | 20 நாட்களில் மூன்றாவது சம்பவம். உ.பி.யில் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News