சட்டசபை தேர்தல் 2018: மேகாலயா 67%; நாகலாந்து 75% வாக்குப்பதிவு
மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் விருவிருப்பாக துவங்கியது.
மேகாலயாவில் 5:00 மணி வரை 67 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதேபோல நாகலாந்து மாநிலத்தில் 75 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
மேகாலயாவில் 4:00 மணி வரை 41% வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. EVM மற்றும் VVPAT காரணமாக பல பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. வாக்காளர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் அனுமதிக்கப் பட்டுள்ளது.
13:39 27-02-2018
இரு மாநிலங்களிளுன் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒரு மணி நிலவரம்:-
மேகாலயா-வில் 27.75 சதவிதமும், நாகலாந்-தில் 56 சதவிகிதமும் வாக்கு பதுவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
12:45 27-02-2018
இரு மாநிலங்களிளுன் நடைபெற்ற வாக்குப்பதிவில் தற்போதைய வாக்குப்பதிவானது 12 மணியளவில் மேகாலயா-வில் 20 சதவிதமும், நாகலாந்-தில் 30 சதவிகிதமும் வாக்கு பதுவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேகாலயா, நாகலாந்து இரு மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாகலாந்தில் வடக்கு அங்காமி தொகுதியில் என்.டி.பி.பி தலைவர் நேபியோ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரண்டு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
வடகிழக்கில் அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி நடத்திவரும் பாரதிய ஜனதா, திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வரும் 3-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. கடந்த 18-ம் தேதி திரிபுராவில் தேர்தல் நடைபெற்றது.