வெப்பச் சலனம் , வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மயம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தின் (Tamilnadu) பெருமபாலான மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. மேலும், மத்திய பிரதேசம் முதல் வடக்கு தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.


மேலும், வளி மண்ட சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், இன்றும், நாளையும், அதாவது ஜூன் 7, 8-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி  ஆகிய  பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும், இம்மாதம் 9, 10-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை (Chennai) பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் உள்ள ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 98 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும்  என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மன்னார் வளைகுடா,தெற்கு வங்கக்கடல் பகுதிகளிள், நாளையும் (ஜூன் 8ம் தேதி), மத்திய,தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 9, 10-ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கேரளா, மாஹே, கர்நாடகத்தின் உள் மாவட்டங்கள், ராயலசீமா, கோவா, லட்சத்தீவுகள்  உள்ளிட்ட சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.


ALSO READ | Education: 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR