சென்னையில் EPS-OPS சந்திப்பு... சலசலப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதா.!

அதிமுகவில் (AIADMK) இருந்து நீக்கப்பட்ட சசிகலா தொண்டர்களுடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2021, 12:31 PM IST
  • மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளையும், பரிசோதனை மையத்தையும் அதிகரிக்க வேண்டும்
  • பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
  • EPS - OPS இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
சென்னையில் EPS-OPS சந்திப்பு... சலசலப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதா.!

அதிமுகவில் (AIADMK) இருந்து நீக்கப்பட்ட சசிகலா தொண்டர்களுடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், அந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது பல கேள்விகளை சந்தேகங்களையும் எழுப்பின. இருவருக்கும் மீண்டும் மோதல் தொடங்கி விட்டதாக கருதப்பட்டது. 

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக (AIADMK) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் (O.Panner Selvam),  இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் (Edappadi Palanisamy) இன்று நேரில் சந்தித்து பேசினர். ஓ.பன்னீர் செல்வம், அரசு பங்களாவை காலி செய்து, வேறு வீட்டிற்கு மாறியதால், முந்தைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, இருவருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு இடையிலான சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் போக்கு தொடங்கிவிட்டதாக உண்டான சலசலப்பிற்கு தற்போது,  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ | COVID-19 தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி 

இந்த நிலையில், நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா தொற்று (Corona Virus) 4 மடங்கு அதிகரித்துள்ள நிலையில்,  மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளையும், பரிசோதனை மையத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதிமுக உறுப்பினர் அல்லாத சசிகலா(sasikala), அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் நோக்கில், அமமுக கட்சி தொண்டர்களுடன் சசிகலா பேசிய ஆடியோ தான் வெளியானது. பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். சசிகலா அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News