நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான NPR மற்றும் தரவு சேகரிப்பு பயிற்சியை உள்துறை அமைச்சகம் காலவரையின்றி நிறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு அறிவித்த 21 நாள் முழுஅடைப்பு முதல் நாளிலேயே இந்த முடிவு வெளியாகியுள்ளது. 


மேலும் மக்கள் அடிக்கடி சந்தேகத்துடன் பார்த்த இரண்டு பயிற்சிகளை நிறுத்தி வைக்குமாறு எதிர்க்கட்சிகள் பல முறை வலியுறுத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிக்க NCR எவ்வாறாயினும் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அரசாங்கம் இந்த அச்சத்தை பல சந்தர்ப்பங்களில் ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளது.


இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று வெடித்ததையும், அதை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி இரண்டு பயிற்சிகளை நிறுத்தி வைக்குமாறு பல மாநிலங்களும் அரசியல்வாதிகளும் கோரியிருந்தனர்.


முந்தைய அதிகாரப்பூர்வ வெளியீட்டின் படி, இந்த இரண்டு பயிற்சிகளும் 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்பட இருந்தன. இரண்டு பயிற்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்கள் மாநாட்டின் பின்னர் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் கூறியிருந்தது. எனினும் தற்போதைய அறிவிப்பு இந்த நிலையினை மாற்றியுள்ளது.


NPR-ஐ எதிர்க்கும் மாநிலங்களில் கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகியவை அடங்கும். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டை பட்டியலிடும் கட்டத்துடன் ஒத்துழைப்பதாகக் கூறினர்.


நாட்டில் உள்ள ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதே NPR இன் நோக்கம் என மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில் NPR செயல்முறைக்கு மக்கள் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.