செப்டம்பருக்குள் கேரளாவில் 18+ வயதினர் அனைவருக்கும் தடுப்பூசி: அமைச்சர் வீணா ஜார்ஜ்
செப்டம்பர் மாதத்திற்குள் கேரளத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்படும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
Corona Vaccine: செப்டம்பர் மாதத்திற்குள் கேரளத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்படும் என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள டிரைவ் த்ரூ தடுப்பூசி இயக்கம் வெற்றி பெற்றால் இது போன்று பல மாவட்டங்களுக்கு இது நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.
டிரைவ்- த்ரூ தடுப்பூசி மையத்தை அவர் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் மேலும் கூறியதாவது:டிரைவ் இன் தடுப்பூசி மையம் மூலம் வாகனத்தில் இருந்தபடி தடுப்பூசியினை 24 மணி நேரமும் செலுத்திக் கொள்ளலாம்.சிரமங்கள் ஏதேனும் ஏற்பட்டால் தேவையான மருத்துவ உதவியும் வழங்கப்படுகிறது.இந்த இயக்கம் வெற்றி பெற்றால் இதனை அதிக மாவட்டங்களில் தொடங்க முடியும் என்று அவர் கூறினார்.
ALSO READ | COVID-19 Update: கடந்த 24 மணி நேரத்தில் 34,457 புதிய தொற்று பாதிப்பு; 375 பேர் பலி
மேலும் அவர் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி போடுவதை அரசு இலக்காக கொண்டுள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட 52 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸும் மற்றும் 19 சதவீகத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸும் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தேசிய சராசரியை விடவும் அதிகமானது.ஒன்றிய சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பிறகு மிகவும் சாதகமாக இது உள்ளது.இதனால் மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையுள்ளது.அவர்கள் வழங்கும்பட்சத்தில் நாம் இந்த இலக்கினை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது.
குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டம் அரசிடம் தயாராக உள்ளது.இதற்கான ஒப்புதலை ஒன்றிய அரசு அளித்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.கேரளாவில் அதிகபட்ச கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து நடத்துவதன் மூலமாக நோயாளிகள் எண்ணிக்கையினை எளிதாக நம்மால் கண்டறிய முடிகிறது.இதன் காரணமாக தான் டி.பி.ஆர் (T.P.R) அதிகமாக உள்ளது.
"எனவே கேரள மக்கள் இந்த ஓணம் பண்டிகை காலங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும்! வாழ்க்கையோடு , வாழ்வாதாரமும் நமக்கு முக்கியம்.என்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.
ALSO READ | SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR